அடேங்கப்பா! பாகற்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

bitter gourd

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காத காய்கறி  குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் இதன் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளது அது என்னவென்றும்  யார் சாப்பிடக்கூடாது என்றும் எந்த உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கசப்பாக இருந்தாலும் ஒரு பொருளை நம் முன்னோர்கள் உணவாக மாற்றி சாப்பிட்டார்கள்  என்றால் அதில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும்

  • பாகற்காய்  நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கிட்டத்தட்ட 50 சதவீதம் கால்சியத்தை கொடுக்கிறது இதனால் எலும்பு பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கப்படுகிறது.
  • ப்ரீ டயபடிக் என சொல்லப்படும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை சீராக்கி சர்க்கரை நோயாக மாறிவிடாமல் தடுக்க முடியும். சர்க்கரை நோயாளிகளும் பாகற்காயை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
  • இதில் உள்ள நார்ச்சத்து ஜீரண குறைபாட்டை சரி செய்கிறது மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த நிவாரணியாகவும் உள்ளது.
  • கழிவுகளை நீக்கக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ள ஒரே காய்,இதனால் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீக்கப்படுகிறது. குடல் புழுக்களையும் அகற்றுகிறது. அதனால் அடிக்கடி குழந்தைகளுக்கு பாகற்காயை கொடுக்க வேண்டும்.
  • 100 கிராம் பாகற்காயில் ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான விட்டமின் சி யில் 99% கிடைத்துவிடும்.
  • விட்டமின் ஏ, சிங்க்,  அயன், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நம் உடலின் அன்றாட தேவைகளில் நாற்பது சதவீதத்தை பூர்த்தி செய்து விடும்.

பயன்படுத்தும் முறை

பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்காத பாகற்காயாக இருந்தால் ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். உணவுக்கு முன் காலை  30 எம் எல் எடுத்துக் கொள்ளலாம்.

பாகற்காயுடன் சேரக்கூடாத உணவுகள்

ஒரு சிலருக்கு தயிருடன்  பாகற்காயை சேர்த்தால் ஒவ்வாமை ஏற்படும் இவர்கள் தவிர்க்கவும். சித்தா , ஆயுர்வேத மருந்துகள் எடுக்கும் போதும் தவிர்க்கவும். ஏனெனில் பாகற்காய், மருந்துகளின் வீரியத்தை குறைக்கும். மேலும் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும் போதும் பாகற்காய் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் தவிர்த்துக் கொள்ளலாம், மற்றபடி பாகற்காய் அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த காய்கறி.

பாகற்காயை சமைக்கும் போது அதன் கசப்பு சுவை மாற இனிப்பு சேர்த்து செய்வதை தவிர்க்கவும். பாகற்காயின்   இயற்கை சுவையுடன் எடுத்துக் கொண்டால்தான் அதன் முழு பலனையும் நம்மால் பெற முடியும். எனவே வாரத்தில் இரண்டு முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்து அதன் நற்பலன்களை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்