மூட்டுவலியை குணப்படுத்தும் எலுமிச்சை!
மூட்டுவலியை குணப்படுத்தும் எலுமிச்சை.
இன்று மிக சிறிய வயதினரும் கூட, மூட்டுவலி இருப்பதாக கூறுவதுண்டு. இதற்கு காரணம் நமது உணவு முறைகளாகவும் இருக்கலாம். அன்று நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உண்டு வாழ்ந்ததால், நீண்ட ஆயுளோடு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள்.
ஆனால் இன்று நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, உணவுகளை தான் விரும்பி உண்கிறோம். இந்த உணவுகள் எல்லா சூழ்நிலைகளிலும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூட்டுவலியை குணப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- எலுமிச்சை
- நல்லெண்ணெய்
- காட்டன் துணி
செய்முறை
முதலில் 1-2 எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு காட்டன் துணியை எடுத்து, அதில் எலுமிச்சையை வைத்து நன்கு கட்ட வேண்டும்.
பின் வெதுவெதுப்பான நல்லெண்ணையில் அதை முக்கி எடுத்து, முட்டில் வலி உள்ள இடத்தில், 5-10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்து வந்தால், மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.