அடடே! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இந்த பூவிலும் கூட, இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பூக்களை பயன்படுத்துகிறோம். நாம் பூக்களை பொதுவாக அழகுக்காகவும், தலைகளில் வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், பூக்களிலும் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.
தற்போது நாம் இந்த பதிவில் செவ்வந்தி பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
தலைவலி
தலைவலி பிரச்னை உள்ளவர்கள், செவ்வந்தி பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், தலைவலி நீங்கி விடும்.
மலசிக்கல்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று தான் இந்த மலசிக்கல் பிரச்னை. மலசிக்கல் பிரச்னை உள்ளவர்கள், செவ்வந்தி பூவில் கசாயம் செய்து, அதனுள் பனைவெல்லம் கலந்து குடித்து வந்தால், மலசிக்கல் நீங்கி விடும்.
உடல் சூடு
உடல் சூடு பிரச்னை உள்ளவர்கள், செவ்வந்தி பூவை கசாயம் செய்து குடித்து வந்தால், உடல் சூடு தணிந்து விடும்.
வீக்கம்
உடலில் எந்த இடத்தில வீக்கம் இருந்தாலும், வீக்கம் உள்ள பகுதியில், செவ்வந்தி பூவை கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை எடுத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வீக்கம் குறைந்து விடும்.