மூட்டு வலி பிரச்சனையால் மிகவும் அவதிபடுகிறீர்களா அதை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க

Default Image

மூட்டு வலி சாதாரணமாக வயதானவர்களுக்கு வரக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று.இது நமது மூட்டில் உள்ள திரவம் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு என்கிற திரவம் குறைவதால் மூட்டில்  சத்தம் ஏற்பட்டு மூட்டு மிகவும் இறுக்கமாக மாறிவிடும்.

மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்:

 

மூட்டுவலி 30 வயது முதல் 40 வரை ருமாட்டியிட் ஆர்த்ரைட்ஸ் எனப்படும் கை மற்றும் கால்களில்  உள்ள மூட்டுகளில் வரக்கூடிய  ஒரு விதமான வலியாகும்.இந்த வலி பரம்பரையாக தாக்க கூடிய வலியாகும். இந்த வலி நாம் உண்ண கூடிய உணவு மூலமாகவும் ஏற்படுகிறது.

சில நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளாலும் சிலருக்கு மூட்டு வலி ஏற்படக்கூடும். இந்த பதிப்பில் இருந்து மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு பொருட்களை படித்தறிவோம்.

மூட்டுவலி இருப்பவர்கள் சாப்பிட கூடாத உணவு:

மூட்டுவலியால் அநேகமாக பலர் பாதிக்கபடும் அவர்களின் உணவு பழக்க வழக்கைத்தை மாற்றும் போது இந்த பாதிப்பில் இருந்து விடுபடுகிறார்கள்.

மூட்டு வலி இருப்பவர்கள் அதிகமாக உணவில் புளிப்பு சேர்த்து கொள்ள கூடாது. சோளம் ,கோதுமை மற்றும் மாட்டிறைச்சி ,ஆட்டிறைச்சி ,தக்காளி ,ஓட்ஸ்,வெண்ணைஆரஞ்சு,எலுமிச்சை,அதிக சர்க்கரை , கத்தரிக்காய் முதலிய பொருட்கள் மூட்டு வலியை அதிக படுத்தும் உணவு பொருள்களாகும்.

தேநீர் மற்றும் காபி அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மேலும் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

மூட்டுவலி உள்ளவர்கள் சாப்பிட கூடிய உணவு பொருட்கள்:

மூட்டு வலி உள்ளவர்கள் சாப்பிட கூடியஉணவுபொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஒமேகா 3 அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவு பொருட்களை நமது உணவில் சேர்த்து கொள்வதால் மூட்டு வலியை குறைக்க உதவியாக இருக்கும்.

ப்ரோக்கோலி :

 

ப்ரோக்கோலி நமது உடலுக்கு மிக சிறந்த ஊட்டசத்துக்களை கொடுக்கும் காய்கறிகளில் ஒன்று.

ப்ராக்கோலியில் உள்ள அதிகளவிலான வைட்டமின் கே, வைட்டமின் சி, சல்போரஃபேன் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுவதால் இது மூட்டில் ஏற்படும் ஒருவிதமான ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு வீக்க வலியைத் தடுக்கும்.

மீன் :

 

மீனில் அதிக அளவு புரத சத்துக்கள் காணப்படுகிறது. இது நமது உடலுக்கு அளப்பரிய நன்மைகளை கொடுக்கிறது.இது மூட்டுவலியை சரிசெய்வதில் மிக சிறந்த அருமருந்தாக பயன்பட்டு வருகிறது.இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் பல பயன்களை நமக்கு கொடுக்கும்.

 

காய்கறிகள் :

 

காய்கறிகளை நம் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நன்மை தரும்.அசைவ உணவுகளைத்தவிர்த்து காய்கறிகளை நாம் உட்கொண்டு வந்தால் அது நமது உடலுக்கு பல சத்துக்களை கொடுக்க வல்லது.

காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

பால் :

கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்களை உணவில் எடுத்து கொண்டால் நமது எலும்புகளுக்கு வலிமைகளை கொடுக்கும்.

பூண்டு :

மூட்டு வலியால் பாதிக்கபட்டவர்கள் தினமும் பூண்டை உணவாக எடுத்து வந்தால் விரைவில்குணமாகும்.

மேலும் இதனை தினமும் 3 பற்கள் பூண்டு சாப்பிட்டு வந்தாலே இதயம் மற்றும் மூட்டு ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் மிகவும் நல்லது.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்