இன்று அதிகமானோர் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், உடல் எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக செயற்கையான மருத்துவர்களை தான் நாடுகிறோம்.
ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் குறைக்க முயற்சித்தால்,அது ஆரோக்கியமானதும், பக்க விளைவுகள் இல்லாததுமாக இருக்கிறது.
தற்போது இந்த பதிவில், இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்ப்போம்.
சோம்பு தண்ணீர் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து விடும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
சுரைக்காய் நமது சமையல்களில்பயன்படும் காய்கறி வகைகளில் ஒன்று. சுரைக்காயில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் உள்ளது. வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம்.
பப்பாளி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பலவகை தான். பப்பாளி காயில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே, பப்பாளி காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் இடி குறையும்.
எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
வாழைத்தண்டு நமது அருகாமையில் சந்தைகளில் கிடைக்கக் கூடிய ஒன்று. வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.
மனிதனுடைய வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த உடற்பயிற்சியில், ஒரு பகுதி தான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி மூலம் நமது உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம்.
மேலும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால், உடல் பருமன் குறைவதற்கு நாம் உணரலாம். மேலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…