தைராயிடு பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை படிங்க!
இன்றைய நாகரீகமான உலகில் மக்கள் பல விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதற்க்கு காரணம் நாம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளை சாப்பிடுவது தான்.
இந்நிலையில், இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் ஒன்று தைராயிடு. இந்த நோய் நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்று. தற்போது இந்த பதிவில், தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
பால்
நமது உடலில் தைராயிடு பிரச்னை ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் அயோடின் குறைபாடு தா. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பாலினை தினமும் ஒரு கப் குடிப்பது மிகவும் நல்லது.
யோகர்ட்
தைராயிடு பிரச்னை உள்ளவர்கள், தினமும் தங்களது உணவில், யோகர்ட் சேர்ப்பது மிகவும் நல்லது. இதில் கொழுப்பு சத்து குறைவாகவும், அயோடின் சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.
இறைச்சி
தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் உணவில், கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சி சேர்ப்பது நல்லது. இதில் உள்ள துத்தநாக சத்து தைராயிடு பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும், சாதாரண உப்பை தவிர்த்து, அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும்.
முட்டை
தைராயிடு பிரச்னை உள்ளவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த மருந்தாகும். முட்டையில் உள்ள அயோடின் சத்து நமது உடலில் தைராயிடு சுரப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்று.
தானியங்கள்
தைராயிடு பிரச்னை உள்ளவர்கள், தானிய வகை உணவுகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சாப்பிடுவதால், உடலில் தைராயிடு சுரப்பி சீராக இயங்க உதவுகிறது.