பாயில் படுத்து உறங்குவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்.
பொதுவாக நம்மில் பலர் இன்று பாயில் உறங்குவதை விட மெத்தையில் உறங்குவதை தான் விரும்புகின்றனர். ஆனால் நம்முடைய மூதாதையர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு காரணம் பாயில் படுத்து உறங்கியது தான். தற்போது இந்த பதிவில் பாயில் படுத்து உறங்குவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
கோடை காலம்
கோடை காலத்தைப் பொறுத்தவரை நமது உடல் மிகவும் சூடாக காணப்படும். இதனை தடுக்க பாயில் படுத்து உறங்கினால் நமது உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு நிம்மதியான உறக்கத்தையும் அளிக்கிறது. பொதுவாக வேலைக்கு சென்று வந்து மெத்தையில் படுத்து உறங்கினால் அவர்களது உடல் மிகவும் ஆரோக்கியமானதாக இருப்பதாக உணர்கின்றன. ஆனால் மெத்தையில் படுத்து உறங்குவதை விட தரையில் பாய் விரித்து உறங்குவதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அலர்ஜி
இரசாயனங்கள் கலந்த மெத்தைகளும் இன்று சில இடங்களில் தயாரிக்கப்படுகிறது. இதனால், உடலில் அலர்ஜி, தோல் நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்படிப்பட்ட மெத்தையில் படுப்பதை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் பாய்களில் படுப்பது நல்லது.
முதுகு தண்டு ஆரோக்கியம்
முதுகு தண்டு ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் எந்த வேலையையும் செய்ய முடியும். எனவே பாயில் படுப்பததன் மூலம் நமது முதுகு தண்டு ஆரோக்கியமாக இருக்கிறது. சிறு குழந்தைகளை பாயில் படுக்க வைப்பது மிகவும் நல்லது. அவர்கள் வளரும் காலங்களில் மிகவும் ஆரோக்கியத்துடன் வளர இது உதவுகிறது.
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…