ஆட்டுக்கறி எடுக்க போறீங்களா ?அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!
Mutton-ஆட்டு இறைச்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
அக்காலம் முதல் இக்காலம் வரை மவுசு குறையாமல் இருக்கும் ஒரு அசைவ உணவு என்றால் அது ஆட்டு இறைச்சி தான். இந்த ஆட்டு இறைச்சியில் ஈரல், தலைப்பகுதி, எலும்பு பகுதி ,நுரையீரல், குடல், இருதயம், மண்ணீரல்,, சிறுநீரகம் ஆட்டு விதை பைகள் போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு தனித்துவமும் மருத்துவ குணமும் உள்ளது.
ஆட்டின் ஈரல்:
ஆட்டு இறைச்சிக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி உண்ணக்கூடியது ஆட்டு ஈரல் தான் .இதில் அதிகமான இரும்புச்சத்து ,விட்டமின் ஏ ,புரதம் விட்டமின் பி6 ,விட்டமின் பி12, பயோட்டின்,போலேட் , அமினோ ஆசிட், நியாசின் சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
இதில் உள்ள நியாசின் சத்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதிகமாக இரும்பு சத்து இதில் இருப்பதால் ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரலை வாரத்திற்கு இரண்டு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் .இதனால் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். மேலும் உடல் மெலிந்தவர்கள் எடை கூடவும் ஆட்டு ஈரலை எடுத்துக் கொள்ளலாம்.
குடல் பகுதி:
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டுக்குடலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும் ,இதற்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது .
இதில் கொலாஜின் சத்து அதிகம் உள்ளதால் சரும சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்கும்.எலும்பு மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் .மேலும் இன்சுலினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய சிறந்த உணவாகும்.
இருதயம்:
Q10 என்று சொல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் இதில் நிறைந்துள்ளது. இது மனித இருதயத்தை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ, விட்டமின் பி சத்துக்கள் எல்டிஎல் என்று சொல்லக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதய தமனிகளை பாதுகாக்கவும் இருதய படபடப்பு உள்ளவர்கள் இந்த இருதய பகுதியை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும்.
மண்ணீரல்:
மண்ணீரலில் புரதம் மற்றும் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதற்கு சுவரொட்டி என்ற பெயரும் உண்டு. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ,நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த செய்கிறது. நீண்ட நாட்களாக நோயிற்று உடல் மெலிந்தவர்கள் இந்த உறுப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் விரைவில் உடல் தேறும் .
சிறுநீரகம்:
ஆட்டின் சிறுநீரகத்தில் விட்டமின் பி12, அயன், ஒமேகா 3, புரதம் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது சிறுநீரகத்தை வலுப்படுத்துகிறது.
ஆட்டின் மூளை:
ஆட்டின் மூளை பகுதியில் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. மேலும் அல்சைமர் மற்றும் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டின் மூளை பகுதியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
எலும்பு பகுதி:
நம்முடைய எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ஆட்டின் எலும்பு பகுதியில் அதிகம் உள்ளது. இது மூட்டு எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. குறிப்பாக இதில் கொலாஜின் சத்து அதிகம் உள்ளது.
ஆட்டின் நெஞ்சு பகுதியை சூப் செய்து குடித்தால் நெஞ்சில் உள்ள கபத்தை வெளியேற்றும். சளி இருமல் உள்ளவர்கள் இதை சூப் செய்து குடித்து வரலாம். மேலும் எலும்பு சார்ந்த பிரச்சினை உள்ளவர்களும் ஆட்டின் எலும்பு பகுதியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
நுரையீரல்:
ஆட்டின் நுரையீரலில் செலினியம் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் நிறைந்துள்ளது. நுரையீரல் வலுப்பெறவும், ஆஸ்துமா, மூச்சு விடுதல் சிரமம் உள்ளவர்கள் இந்த நுரையீரல் பகுதியை சமைத்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.
ஆட்டின் விதைப்பை:
புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆண்களுக்கு தேவையான டெஸ்டோஸ்ட்ரோன் என்று சொல்லக்கூடிய ஹார்மோனை அதிகரிக்கும். ஆண்மை குறைவு மற்றும் விந்தணுக்களின் குறைபாடு உள்ளவர்கள் ஆட்டின் விதைப்பையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
ஆகவே ஆட்டு இறைச்சியை எடுத்துக் கொள்வதை விட இதன் ஒவ்வொரு உறுப்புகளையும் மாற்றி மாற்றி தேர்வு செய்து சாப்பிட்டு வந்தால் பல மருத்துவ நன்மைகளை பெறலாம்.