பள பளக்கும் பாதாமில் இருக்கும் பலவகையான மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா ?
நமது அன்றாட வகையில் நாம் பல வகையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.மேலும் உணவில் நாம் சத்தான உணவிற்கு பதிலாக நாம் பாஸ்ட் புட் உணவுவகைகளையே தேடி தேடி உண்ணுகிறோம்.
இந்நிலையில் பாதாம் நமது உடலுக்கு தேவையான பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது.அதனை நாம் உணவில் சேர்த்து வந்தால் பல வகையான சத்துக்களும் நமக்கு கிடைக்கும். மேலும் பாதாமில் கால்சியம் ,பொட்டாசியம்,நார்சத்து,மெக்னீசியம்,பாஸ்பரஸ் ,வைட்டமின் இ முதலிய சத்துக்களை கொண்டுள்ளது. பாதாமில் இருக்கும் அறிய மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
மூளை வளர்ச்சி :
பாதாம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவி புரியும்.பாதாமில் இருக்கும் பல வகையான சத்துக்கள் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பேருதவி புரியும்.
தினமும் காலையில் 4 பாதாமை நீரில் ஊற வைத்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வருவது மிகவும் நல்லது.
இதயம் :
பாதாமை நாம் தினமும் உணவில் எடுத்து வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.மேலும் பாதாமில் புரதம் ,பொட்டாசியம் மற்றும் பல் நல்ல கொழுப்பு பல சத்துக்கள் இதயத்தை பாதுகாக்க உதவும்.வைட்டமின் இ மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
மலசிக்கல் :
பாதாமில் இருக்கும் நார்சத்து மலச்சிக்கலை தீர்க்கும்.மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பாதாமை சாப்பிட்டு விட்டு தண்ணீரை குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீர்க்கும்.
கெட்ட கொழுப்புகளை நீக்கும்:
பாதாம் நமது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.
புற்று நோய் :
பாதாமை நாம் தினமும் சாப்பிட்டு வர நமது பெருங்குடலில் உணவுகளை போவதை சீராக்கி தேவையற்ற கழிவுகள் சேர்வதை தடுக்கிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்கும் :
பாதாமை நாம் தினமும் உணவில் சேர்த்து வருவதால் நமது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
முக பொலிவு :
பாதாமை நாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால் அது நமது முகத்தில் ஏற்படும் வறட்சி, முகப்பரு, கருமை, கரும்புள்ளிகள் முதலிய பிரச்சனைகளை தீர்க்கிறது.
உடல் எடையை குறைக்கும் :
பாதாமை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் அது நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.