நீங்கள் 40 வயதை நெருங்கும் பெண்களா? அப்போ மெனோபாஸ் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!

menopause

Menopause-மெனோபாஸ்  பற்றியும் மெனோபாஸின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

மெனோபாஸ் என்றால் என்ன?

மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலம் ஆகும். இது ஒரு இயற்கையான நிகழ்வாகும் .இதை தவிர்க்க முடியாது. 40 வயதை கடந்த அனைத்து பெண்களுமே சந்திக்க வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

அறிகுறிகள்;

40 வயதை நெருங்கும் பெண்கள் மற்றும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் தான் மெனோபாஸ் நிற்கும்.

உடல் அதிகமாக வெப்பத்திற்கு உட்படுவது, உடல் சோர்வு, தலைசுற்றல், உடல் எடை அதிகரிப்பது, எலும்பு தேய்மானம், மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவை ஏற்படும். மேலும் இந்த மெனோபாஸ் 40லிருந்து 55 வயது உள்ள பெண்களுக்கு ஏற்படக்கூடியது. இது ஜீன்களை பொறுத்து ஒவ்வொருவர்களுக்கும் மாறுபடும்.

கடைசி மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை. இது ஒரு ஹார்மோன் மாற்றம்தான்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் நண்மைகள் ;

நம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் நிகழ்வாகும். இந்த ஹார்மோன் பெண்களுக்கு பல நோய்கள் வருவதை தடுக்கிறது. மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஏனென்றால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் மாரடைப்பு ஏற்படும்.

இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்கள் உடலில் இருப்பதால் மாதவிடாய் சுழற்சி சீராக்கப்படுகிறது .கருமுட்டைகள் ஓவுலேசன் நேரத்தில் வெளிவர உதவுகிறது. நல்ல தூக்கத்தை வர வைக்கிறது .எலும்பு  தேய்மானம் அடையாமல் பாதுகாக்கிறது. உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது .தோல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு  இந்த ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது.

ஆனால் 40 வயதுக்கு மேல் இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைய துவங்கி விடுகிறது .இதனால் தான் பல உடல் மாற்றங்களும் நோய்களையும் சந்திக்க நேரிடுகிறோம். குறிப்பாக சிறுநீர் அடக்க முடியாத ஒரு உணர்வையும் ஏற்படுத்தி விடுகிறது.

உணவு முறையும் தீர்வுகளும்;

40 வயதை நெருங்க தொடங்கியுடன் பெண்கள் தங்கள் உணவுகளில்  அதிகம் கவனம்  செலுத்த வேண்டும். குறிப்பாக கால்சியம் ,ஈஸ்ட்ரோஜன், ஒமேகா 3 போன்ற சத்துக்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கால்சியம் அதிகம் நிறைந்த தயிர், பால் ,மோர் ,முருங்கைக்கீரை, ராகி பால், பிரண்டை போன்றவற்றை வாரத்தில் மூன்று நாட்கள் நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்ட்ரோஜன் அதிகம் உள்ள உணவுகளான சுண்டல் ,சோயாபீன் காலிஃப்ளவர் ,திராட்சை, ப்ளம்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒமேகா 3 அதிகம் நிறைந்த மீன்கள் ,சியா விதைகள் போன்ற விதை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உணவு முறையில் சற்று கவனம் செலுத்தினால் மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக தொந்தரவு இருக்காது மேலும் யோகா பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்