இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா?
இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உபாதைகளுக்காக நாம் மருத்துவமனைக்கு செல்லும்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில் இந்த மாத்திரைகள் சற்று பெரிதாக காணப்படும் போது அதை இரண்டாக உடைத்து அதை எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
மாத்திரைகளை இரண்டாக உடைத்து அதனை சாப்பிடுவது மிகவும் தவறான ஒரு செயல் ஆகும். முழுமையாக உட்கொள்வது தான் நமது உடலுக்கு நல்லது. ஏனென்றால், மாத்திரைகள் இரண்டாக உடைக்கும் போது சில சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய டோசேஜ் அளவு மாறுபடக்கூடும். இதனால் நமது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா? என்று கேட்டு உறுதி செய்து கொள்வதும் நமக்கு நல்லது.
மாத்திரைகளை உடைக்கும் போது அவற்றின் அளவு வேறுபடுகிறது. இவ்வாறு தவறான அளவில் உட்கொள்வதன் மூலம் நமது உடலில் மேலும் பல உபாதைகள் ஏற்பட நேரிடலாம். உயர் இரத்த அழுத்தம், கை கால் நடுக்கம், ஆர்த்ரைடிஸ், இதய நோயாளிகள் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மாத்திரையும் தயாரிக்கப்படும் போது அதில் சேர்க்கக்கூடிய மூலப் பொருட்களின் அளவு வேறுபட்டு காணப்படும்.
அவ்வாறு சாப்பிடும் போது நாம் எந்த நோய்க்காக இந்த மாத்திரை எடுத்துக் கொள்கிறோமோ, அந்த நோய்க்கான தீர்வு கிடைக்காது. அதேசமயம் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…