உடல் எடையை குறைக்க இந்த 5 பொருட்கள் போதுமா….! அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

weight loss spices

பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் இருவருமே உடல் எடை சற்று அதிகமாக இருந்தால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக டயட் என்ற பெயரில் உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி கொள்ளுகிறார்கள். சிலர் அவசியமற்ற மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், இவையெல்லாம் அவசியமே கிடையாது. உண்மையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்து நீங்கள் விரும்பும் அழகை பெறுவதற்கு, உங்கள் உணவுக்கு சுவையை ஏற்றக்கூடிய சில மசாலா பொருட்களை உட்கொண்டாலே போதும். அவை என்ன என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இலவங்கப்பட்டை

அதிக அளவில் இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படக் கூடிய லவங்கப்பட்டை உடல் எடை விரைவாக குறைவதற்கு பெரிதும் உதவுகிறது. இது ஆக்சிஜன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும் அதிக அளவில் இலவங்கப்பட்டையை உபயோகிப்பது நமது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதற்கு உதவும்.

இது விரைவான கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது. மேலும் ஒரு நபர் இன்சுலின் எதிர்ப்பாளராக இருக்கும் பொழுது, அவர் உண்ணகூடிய உணவுகள் கார்போஹைட்ரெட் சர்க்கரையாக மாறும். இதனால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இலவங்கப்பட்டை உபயோகிப்பதால் இந்த சுழற்சியை உடைத்து உடல் எடையை அளவோடு வைத்திருக்க உதவுகிறது.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் உடல் எடையை குறைக்க உதவ கூடிய மற்றொரு பொருள். பெருஞ்சீரகம் பசியை குறைக்கக் கூடியது என பரவலாக அறியப்பட்டாலும், இந்த பெருஞ்சீரகத்தை உட்கொள்வதால் நமது பசி குறைவதோடு மட்டுமல்லாமல் உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கிறது.

இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் டி நிறைந்து காணப்படுவதால் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் எளிதில் செரிமானம் ஆகவும், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள இயற்கையான நார்ச்சத்து காரணமாக நமது உடலில் அதிக அளவில் ஏற்படக்கூடிய பசியை குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால், இதை அதிகளவில் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கலோரிகளை குறைப்பதற்கு உதவுகிறது.

எனவே நாம் சாதாரணமாக வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல், உணவில் அதிக அளவில் வெந்தயம் எடுத்துக்கொள்வது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது

ஏலக்காய்

உடல் எடையை குறைப்பதில் ஏலக்காய் எப்படி உதவும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் ஏலக்காய் சாப்பிடுவதால் நமது உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மெலடோனின் சத்து இதில் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை போக்குவதற்கும் பெரிதும் உதவுகிறது.

கருப்பு மிளகு

இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதுடன் மட்டுமல்லாமல், இதனை தினமும் கிரீன் டீயில் ஒரு சிட்டிகை சேர்த்து உட்கொள்ளும் பொழுது ஒரு வாரத்திலேயே நல்ல உடல் எடை இழப்பை காண முடியும் எனக் கூறப்படுகிறது.

மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அழிப்பதற்கு இது உதவுவதுடன், ஆரோக்கியமாக உடல் எடையை குறைப்பதற்கு கருமிளகு உட்கொள்வதும் மிகச் சிறந்த வழி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்