தூக்கி வீசப்படும் பலாக்கொட்டையில் இவ்வளவு பயன்களா?

jack fruit seed

Jack fruit seeds-பலாக்கொட்டையின் சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

கோடை காலத்தில் கிடைக்கின்ற பழங்களில் பலாப்பழமும் ஒன்று. பலாப்பழம்  மிகுந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டது ஆனால் அதைவிட அதன் கொட்டை பகுதிகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள் அந்த சமயத்தில் வரும் நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

பலாக்கொட்டைகளில் உள்ள சத்துக்கள்:

இரும்புச்சத்து, புரோட்டின், துத்தநாகம் ,பாஸ்பரஸ், பொட்டாசியம், தயமின் ,மாங்கனிசு, சிங், காப்பர், விட்டமின் ஏ ,தயமின், ரிபோபிளேவின், நார் சத்துக்கள் மற்றும் உயர்தர ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.

பலாக்கொட்டைகளின் நன்மைகள்:

இதில் இரும்புச்சத்து ,சிங்க் மற்றும் காப்பர் சத்துக்கள் இருப்பதால் ரத்த சோகை வருவது தடுக்கப்படுகிறது.

ரத்தம் கெட்டித் தன்மையாக இருப்பதால்தான் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இந்த பலா விதைகளை எடுத்துக் கொள்ளும் போது ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு சீராக்கப்படுகிறது.

புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ள சைவ உணவுகளில் பலா விதைகளும் ஒன்று. அதனால் இந்த விதைகள் கிடைக்கும்போதே சேகரித்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் .வளரும் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு மிக மிக நல்லது.

இதில்  கரையும் நார்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இருப்பதால் ஜீரணம் ஆவதற்கு தாமதமாகும் .இதனால் பெருங்குடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. இதன்மூலம் பெருங்குடல் புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எச்ஐவி வைரஸ்க்கு எதிராக செயல்படும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகிறது.

இதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சிங் சத்து இருப்பதால் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

முகச்சுருக்கங்கள் ,வறண்ட சருமங்கள் உள்ளவர்கள் பலா விதைகளை வேகவைத்து அரைத்து பால் அல்லது தேனுடன் கலந்து பூசினால் சரும வறட்சி குறைக்கப்படும்.

சாப்பிடும் முறை:

பலா விதைகளை சேகரித்து அதை காய வைத்து சாம்பார் அல்லது கூட்டாக செய்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் விதைகளை நன்கு காய வைத்து தோல் நீக்கி பொடி செய்து கோதுமை மாவு அல்லது தோசை மாவுடன் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் ,5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ,வயது முதியவர்கள் மற்றும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் பலா விதைகளை தவிர்க்கவும் .ஏனென்றால் இது செரிமானம் ஆக தாமதமாகும் .

விலை உயர்ந்த பாதாம் ,பிஸ்தா போன்ற விதைகளுக்கு சமமான சத்துக்களையும் நன்மைகளையும் பலா விதைகள் கொண்டுள்ளது. இதனால் இனிமேல் இதை தூக்கி வீசி  விடாமல் இவை கிடைக்கும் சமயங்களில் சமைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital