Oil benefits -தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு எண்ணெய்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஏதேனும் ஒரு எண்ணெயை இரண்டு சொட்டு வீதம் தொப்புளில் விட்டு மசாஜ் செய்து தூங்கினால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும்.
நம்முடைய தொப்புள் பகுதியில் பின்புறம் பலவித நரம்புகள் பிணைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் ஒரு மைய புள்ளியாகவும் உள்ளது.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி இருமல் போன்ற தொந்தரவு ஏற்படாமல் தடுக்க முடியும், ஒரு சிலருக்கு உதடு மற்றும் பாதத்தில் வெடிப்புகள் புண்கள் இருக்கும் அவர்கள் தினமும் தொப்புளில் எண்ணெய் வைத்தாலே போதும்.
மேலும் கண்பார்வை திறன் அதிகரிப்பு, மாலைக்கண் நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பிற்காலத்தில் புரை ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்தத்தை தூய்மையாக்குகிறது, முகப்பொலிவை அதிகரிக்கிறது.
உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உஷ்ணத்தால் ஏற்படும் தலைமுடி உதிர்வு ஏற்படுவதையும் குறைகிறது. மேலும் நரம்புகளை பலப்படுத்துகிறது.
நல்லெண்ணெய்
பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி மற்றும் கருப்பை கட்டிகள் பாதிப்புகளின் தீவிரம் குறையும் ,ரத்த ஓட்டத்தை சீராக்கும்.உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும் .
விளக்கெண்ணெய்
மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் விளக்கெண்ணையை தொப்புளில் பயன்படுத்தலாம். இது மன அழுத்தத்தையும் குறைக்கும் .ஆழ்ந்த தூக்கத்தையும் கொடுக்கும்.
வேப்ப எண்ணெய்
சரும பிரச்சனை உள்ளவர்கள் வேப்ப எண்ணையை தேய்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சொரியாசிஸ் ,எக்சிமா, சொரி, படை, அரிப்பு, தோல் வறட்சி போன்ற பிரச்சனைகளை தடுக்க கூடியது.
பாதாம் ஆயில்
பாதாம் ஆயிலை பயன்படுத்துவதால் சரும பொலிவு அதிகரித்து அழகு பெறலாம் , முகம் பளபளப்பை அதிகரிப்பது போன்ற பயன்களை கொடுக்கும்.
நெய்
நெய்யை தொப்புளில் பயன்படுத்துவதால் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது, வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
கடுகு எண்ணெய்
குடல் அலர்ஜி உள்ளவர்கள் கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம் மேலும் செரிமான தொந்தரவு, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்தும். புளித்த ஏப்பம் வருபவர்கள் இந்த கடுகு எண்ணெயை பயன்படுத்துவதால் குணமாகும். மேலும் உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெய் இருக்க வேண்டும் இதை நீங்கள் பயன்படுத்தும் போது தோல் வறட்சி குணமாகும். முகப்பொலிவு ஏற்படும் ,சளி இருமல் குறிப்பாக வறட்டு இருமல் ஏற்படுவது தடுக்கப்படும் .
உடல் உஷ்ணத்தை குறைக்கும்.பிறந்த குழந்தையின் தொப்புளின் புண் ஆறவும் சீல் பிடிக்காமல் இருக்கவும் இன்றும் தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்தப்படுகிறது .
இவ்வாறு தொப்புளில் எண்ணெய் தேய்த்து வருவதால் அதன் மருத்துவ நன்மைகளை பெறுவதோடு தொப்புளில் அழுக்கு அழுக்கு படிவதும் குறைக்கப்படுகிறது
இதுபோல் சிறிய சிறிய மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தாலே பல நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் “வருமுன் காப்பதே சிறந்ததாகும்”.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…