ஸ்பைருலினா ( சுருள்பாசி) சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
Spirulina-சுருள் பாசியின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஸ்பைருலினா என்பது சுருள்பாசி ஆகும். இது கடலில் வளரக்கூடிய பாசி வகையைச் சார்ந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
நன்மைகள்:
சுருள்பாசியில் இரும்பு சத்தும், காப்பர் சத்தும் அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும்.மேலும் மெலனின் உற்பத்திக்கு விட்டமின் டி அவசியம் .இந்த விட்டமின் டி சுருள்பாசியில் இருப்பதால் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பாலை விட 4 மடங்கு சத்துக்கள் சுருள்பாசியில் உள்ளது. இந்த சுருள்பாசி சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி சத்தை அதிக அளவில் உறிஞ்சி கொள்ளும். இதனால் இந்த சுருள்பாசியில் விட்டமின் டி அதிக அளவில் உள்ளது.1 கிராம் சுருள் பாசி 1 kg காய்கறிக்கு சமம் .
விட்டமின் சத்துக்களும், தாது சத்துக்களும் மிக அதிகம் .சுருள்பாசியில் பச்சையம் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்திகரிக்கும்.மேலும் எச்ஐவி வைரஸை கட்டுக்குள் வைத்து எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.
சுருள்பாசியை தினமும் 4 கிராம் எடுத்துக் கொள்ளும்போது இயற்கையாகவே நைட்ரிக் ஆக்சைடு அதிகமாகும் ,இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படும்.வெண் தேமல் குணப்படுத்தும் சக்தியும் சுருள்பாசிக்கு உண்டு, ஏனென்றால் கேரட்டை விட பத்து மடங்கு பீட்டா கரோட்டின் உள்ளது.
ஆல்கலின் இருக்கும் உடம்பில் கேன்சர் வர வாய்ப்பு இல்லை என புற்றுநோய் ஆராய்ச்சியில் கூறப்படுகிறது .அந்த வகையில் ஆல்கலின் அதிகம் உள்ள பொருளாகும், இதனால் கேன்சர் வராமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் வாய் புற்று நோய்க்கு சிறந்த பலனையும் கொடுக்கிறது.
விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இந்த சுருள்பாசியை மாத்திரை வடிவத்தில் எடுத்துச் செல்கிறார்கள், அதனால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் இதன் மூலம் கிடைத்து விடுகிறது இன்று அனுபவ பூர்வமாக கூறுகிறார்கள்.
சுருள்பாசியை பயன்படுத்தும் முறை:
இந்த சுருள்பாசியை நேரடியாக எடுத்துக் கொள்ளக் கூடாது, ஏதேனும் உணவுகளுடன் கலந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஏதேனும் ஜூஸில் கலந்தோ அல்லது பால், மோர் ,தேன், சாக்லேட் ,கேக் ,ஐஸ்கிரீம் போன்றவற்றை தயாரிக்கும் போது உணவுகளுடன் கலந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்கொள்ளும் அளவுகள்:
ஐந்து வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கு தான் சுருள்பாசி கொடுக்க வேண்டும்.ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரை கிராம் அளவு கொடுக்கலாம்.12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு கிராம் அளவு கொடுக்கலாம். பெரியவர்கள் என்றால் 4- 5 கிராம் அளவு கொடுக்கலாம்.
இந்த சுருள்பாசி பவுடராகவும் மாத்திரைகளாகவும் சந்தைகளில் கிடைக்கிறது.மாத்திரைகளாக எடுத்துக் கொள்வதை விட பவுடராக எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பிறகு பயன்படுத்தவும்.
சுருள்பாசியை தவிர்க்க வேண்டியவர்கள்:
சிறுநீரக நோய், சிறுநீரகக் கல் , கீழ்வாதம், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கவும். மேலும் இதை கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை விட அதிகமாக உட்கொள்ளும் போது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.
அது மட்டுமல்லாமல் தூக்கமின்மை, தலைவலி, ஒவ்வாமை ஆகியவற்றையும் ஏற்படுத்தும். மேலும் சுருள்பாசி உட்கொள்வதால் அலர்ஜி இருந்தால் அவர்கள் தவிர்ப்பது நல்லது.கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு பயன்படுத்தவும்.
இந்த சுருள்பாசியை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்றே கூறலாம். எனவே மருத்துவரின் ஆலோசனை கேட்டு தினமும் உணவுடன் இந்த சுருள்பாசியை அளவோடு பயன்படுத்தி போதிய ஊட்டச்சத்துக்களை பெறுவோம்.