கருவாடு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?

dry fish

Dry fish- கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், எவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை  பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

அசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாக உள்ள உணவு என்றால் அது கருவாடு தான் .கருவாடு என்றாலே ஒரு சிலருக்கு நா ஊறும் அந்த அளவுக்கு அதன் சுவை சுண்டி இழுக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அதன் வாசனை பிடிக்காது.

கருவாட்டில் உள்ள சத்துக்கள்;

கருவாட்டில் விட்டமின் ஏ சத்து ,விட்டமின் பி12 ,புரோட்டின், பொட்டாசியம் ,மெக்னீசியம், விட்டமின் டி ,ஒமேகா 3 பேட்டி ஆசிட் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

கருவாடு சாப்பிடுவதன்  நன்மைகள்;

கருவாடு சாப்பிடுவதால் அதில் உள்ள விட்டமின் டி சத்து எலும்பு மற்றும் பற்களின் உறுதி தன்மைக்கு உதவுகிறது.ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைச் சார்ந்த பிரச்சினைகளான சினைப்பை கட்டி, நீர் கட்டி போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் வாதம்  ,ரத்த ஓட்டம் ,பித்தம்  போன்றவற்றை சமநிலைப்படுத்துகிறது சீராக்குகிறது .

பிரசவமான   தாய்மார்களுக்கு  பால் சுரப்பை தூண்டக்கூடிய உணவுகளில் ஒன்று கருவாடு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . உடல் நலம் சரி இல்லாதவர்களுக்கு ஏற்படும் சுவையின்மையை சரி செய்து அவர்களின் உடல் நலத்தை தேற்றும்.

கருவாடை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் ,தோல் வியாதி போன்ற அரிப்பு உள்ளவர்கள், மற்றும் உடலில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளவர்கள் ,பத்திய மருந்து எடுத்துக் கொள்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

சிசேரியன் செய்தவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி எடுத்துக்கொள்ளவும் ,6 மாதங்களுக்கு தவிர்ப்பது நல்லது .

கருவாடு சாப்பிடும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்;

கருவாடு எடுத்துக் கொள்ளும் போது ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது, அது என்னவென்றால் பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர் போன்றவையும் கீரை ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடக்கூடாது .

இதனால் தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படும். மேலும் வெண்மேகம் போன்றவற்றையும் ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் கருவாடு சமைத்து சாப்பிடக்கூடாது.

ஆகவே கருவாட்டின் நன்மையை பெற வேண்டும் என்றால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சாப்பிடுவதே சிறந்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்