கிரீன் டீயுடன் தினமும் இதை கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?
கிரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த தேநீர் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
சமீபத்திய ஆய்வில், ஒரு வழக்கமான கப் கிரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சையைச் சேர்ப்பது அதிக நன்மைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதன்படி, கிரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது செல்கள் ஆக்ஸிஜனேற்ற சேதம் அடைவதை தடுக்க உதவுகிறது. இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் உடல் பருமன் போன்ற நீண்டகால பிரச்சனைகளுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன.
உடல் எடை குறைப்பு
எலுமிச்சம்பழம் கலந்த கிரீன் டீ பருகுவது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சிறந்த கலவையாகும். இந்த பானம் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் உதவ முடியும். மேலும் இது அவர்களின் உடல் எடை மற்றும் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், உங்கள் உணவில் ஒரு கப் கிரீன் டீயை சேர்த்துக் கொள்ளுங்கள். க்ரீன் டீ குடிப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஆரோக்கியமாக பராமரிக்கவும், சர்க்கரை நோய் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதய நோய்
எலுமிச்சை கலந்த கிரீன் டீ இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். ஆய்வுகளின்படி, இது சிட்ரஸ் ஃபிளாவனாய்டுகளால் நிரம்பியுள்ளது, இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இதனால் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை ஆதரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்கள் கடினமான தாதுப் படிவுகள் ஆகும், அவை சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பெரும் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். தினமும் எலுமிச்சை சாறுடன் கிரீன் டீ குடிப்பது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.