வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.!

amla juice

Amla juice– நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்  பற்றி இப்பதிவில் அறியலாம் .

நெல்லிக்காய் :

ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின் ஆப்பிள் எனவும் கூறப்படுகிறது. தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வர ஆப்பிளை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்திலும் நெல்லிக்கனி பயன்படுத்தப்படுகிறது.

நெல்லிக்கனியின் சத்துக்களும் நன்மைகளும்;

நெல்லிக்கனியில் வைட்டமின்கள் நார்ச்சத்து ,சோடியம் பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம் மெக்னீசியம் ,நியாசின் அமினோ அமிலங்கள் தயமின் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்கனியின் ஜூசை காலை வெறும் வயிற்றில் குடித்து வர கிடைக்கும் நன்மைகளை இப்பதிவில் காண்போம்.

இருதய ஆரோக்கியம் ;

நெல்லிக்கனியில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், அமினோ அமிலங்கள் பெக்டின் எனும் வேதிப்பொருள் அடங்கி உள்ளது. இது நமது உடலில் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து இருதய ரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.

சரும நோய் ;

சரும நலத்திற்கு சிறந்த ஒரு இயற்கை பானமாக விளங்குகிறது நெல்லிக்கனி ஜூஸ். பொதுவாக ரத்தத்தில் கழிவுகள் அதிகமாகும் போது தான் சருமம் சார்ந்த நோய்கள் ஏற்படும் நெல்லிக்கனியை ஜூஸாக எடுத்து வர ரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி ரத்தம் சுத்தமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி ;

நெல்லிக்கனியில் இருக்கக்கூடிய விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்துகிறது இதன் மூலமாக பல்வேறு தொற்று நோய்கள் தடுக்கப்படும்.

அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சல் என அவதிப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸாக எடுத்துக் கொள்வது நல்லது.

எலும்பு வலிமை;

வலிமையான எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் அவசியம் என நம் அனைவருக்கும் தெரியும். கால்சியம் சத்துக்களை எலும்புகள் உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கிறது மற்றும் எலும்புகளை சேதப்படுத்தும் ஆஸ்டியோ பிளாஸ்டிக் எனும் செல்களின் செயல்பாட்டை வெகுவாக குறைத்து எலும்புகள் சேதம் அடையாமல் பாதுகாக்கிறது.

சர்க்கரை நோய் :

ஆரம்பகட்ட சர்க்கரை நோயை முற்றிலும் குணமாக்கும் ஆற்றல் இந்த நெல்லிக்கனி சாற்றுக்கு உண்டு. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

தலைமுடி வளர்ச்சி:

தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஆற்றல் இந்த நெல்லிக்கனிக்கு உண்டு .தலைமுடி பிரச்சனைகளான இளநரை பித்தநரை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த நெல்லிக்கனியை காலை வெறும் வயிற்றில் குடித்து வர தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

உடல் எடையை குறைப்பு ;

அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் இந்த நெல்லிக்கனியை காலை வெறும் வயிற்றில் குடித்து வர அதிலுள்ள நார்ச்சத்து ஆங்காங்கே தேங்கி இருக்கும் கரைத்து உடல் எடையை வெகுவாக குறைக்கும்.

கண்பார்வை :

நெல்லிக்கனி ஜூஸை தினமும் குடித்து வர கண் கருவிழியில் திசு வளர்ச்சி குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது. இதன் மூலமாக கண்புரை ஏற்படுவது தடுக்கப்படும் மற்றும் மங்கலான கண் பார்வை பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் இந்த நெல்லிக்கனி ஜூசை காலை வெறும் வயிற்றில் அருந்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
MK Stalin - Amithsha
AmitShah - Rajya Sabha
ravichandran ashwin
AUSvsIND
Arul
Ashwin announces retirement