கருப்பு அரிசியில் இத்தனை நன்மைகளா?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!
கருப்பு அரிசியில் எவ்வளவு நன்மை இருக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கருப்பு அரிசி மிக விலை உயர்ந்த அரிசி மட்டுமில்லாது இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் குவிந்து கிடக்கிறது. இது மணிப்பூரில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்த அரிசியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மேலும், இதில் புரதசத்து, இரும்புசத்து மற்றும் நார்சத்து அதிகளவு காணப்படுகிறது. இந்த அரிசியில் இருக்கக்கூடிய முக்கியமான சில நன்மைகளை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கருப்பு கவுனி அரிசி என்றழைக்கப்படும் இந்த அரிசியில் அந்தோசயினின்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த அந்தோசயினின் புற்றுநோய் எதிர்ப்பு தன்மைகளை கொண்டது. இதனால் இந்த அரிசியை நாம் சாப்பிட்டு வருவதன் மூலமாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
பொதுவாகவே அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கருப்பு கவுனி அரிசியில் 23 வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் இதில் சத்து மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
கருப்பு கவுனி அரிசியில் நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் இதனை நாம் சாப்பிட்டு வருவதனால் கெட்ட கொழுப்பு குறைகிறது. இதனால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்படும்.
இன்றைய காலத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரும் உடல் பருமன் அடைந்து எப்படி பருமனை குறைப்பது என்று தெரியாமல் திண்டாடி வருகின்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு கருப்பு அரிசி சிறந்த ஒரு தீர்வாக இருக்கும். ஏனென்றால் இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக இருக்கிறது. இது உடலில் அதிகமாக கொழுப்பை அனுமதிக்காது. அதனால் உடலில் உள்ள எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இந்த கருப்பு அரிசியை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பாதிப்புகள் குறையும்.