அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்.
இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது.
அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியமான ஒன்று. நாம் ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் நோய் கிருமிகளை அழிக்கவும், நம் உடலை இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
குடல் புண்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் பிரச்சனை ஏற்படுவதுண்டு. ஏனென்றால், இன்று பலரும் சரியான உட்கொள்ளாதது தான் காரணம். குடல்புண் பிரச்சனை உள்ளவார்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் புண் பிரச்சனை நீங்குவதுடன், செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
முகப்பரு
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மேம்படுத்த பல முயற்சிக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி அதனுடன் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகப்பரு மற்றும் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.
புற்றுநோய்
இன்று புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், ஆரஞ்சுப் பழத்தோலை பொடிசெய்து அதை டீ உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.