கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா? சமைத்து சாப்பிட்டால் நல்லதா?

carrot

Carrot –கேரட்டை எப்படி சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் அனைவரும் வாங்கும் காய்கறிகளில் கேரட் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். கேரட்டை வைத்து பலவித உணவுகளை நாம் சமைத்து சாப்பிடுவோம் ஆனால் அவ்வாறு சமைத்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

கேரட்டில் உள்ள சத்துக்கள்:

100 கிராம் கேரட்டில் 88 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. ஒன்பது சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது.3 கிராம் நார்ச்சத்து உள்ளது.அதிலும் கரையும் நார்சத்து கரையாத நார்ச்சத்தும் உள்ளது .வைட்டமின் எ ,சி ,பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது .

இந்த கேரட்டுகள் பலவித நிறங்களில் நமக்கு கிடைக்கும். இதற்கு காரணம் அதில் உள்ள பைட்டோ கெமிக்கல் தான். ஆரஞ்சு நிறம் உள்ள கேரட்டுகளில் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் இருக்கும். மஞ்சள் நிற கேரட்டில் லியூட்டின் அதிகம் இருக்கும். சிவப்பு நிற கேரட்டில் லைகோபினும் , பர்பிள் நிற கேரட்டில் ஆன்ந்தோசைனின்  பைட்டோ கெமிக்கலும் உள்ளது.

பைட்டோ கெமிக்கல்:

பைட்டோ கெமிக்கல் என்பது தாவரங்கள் தன்னை பாக்டீரியா, வைரஸ் பூஞ்சைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ரசாயனங்களை உருவாக்குகிறது. இதை நாம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் போது அது நம் உடலுக்கு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்களாக பல நன்மைகளை செய்கிறது.

கேரட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ்:

கேரட்டில் நான்கு விதமான பைட்டோ கெமிக்கல் உள்ளது. ஒவ்வொரு பைட்டோ கெமிக்கலாலும்  நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பினாலிக்ஸ்

இந்த வகை பைட்டோ  கெமிக்கல்ஸ் சர்க்கரை வியாதி, இருதய நோய் அல்சைமர்  போன்றவை வராமல் பாதுகாக்கும்  தன்மையை கொண்டுள்ளது.

பாலி அசிட்டலின்

இதற்கு கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை உண்டு. மேலும் ஸ்ட்ரோக், மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.

கரோட்டினாய்ட்ஸ்

இது  விட்டமின் ஏ யாக நம் உடலுக்குள் மாறி நம் மரபணுக்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது. மேலும் சரும  ஆரோக்கியத்திற்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமல்லாமல் சூரிய புற ஊதா கதிர்கள் மற்றும் ப்ளூ லைட்டிலிருந்து நம் கண்களை பாதுகாக்கிறது.

அஸ்கார்பிக் ஆசிட்

அஸ்கார்பிக் ஆசிட் என்றால் விட்டமின் சி ஆகும். இது சருமத்தின் கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் விட்டமின் சி யானது இரும்புச்சத்தை உட்கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது.

பச்சை கேரட்:

கேரட்டை பச்சையாக சாப்பிடும் போது அதில் உள்ள நார் சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கிறது .விட்டமின் சி யும் முழுவதுமாக நமக்கு கிடைக்கிறது. மேலும் கிளைசிமிக் குறைவாக கிடைக்கும். ஆனால் பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது கரோட்டினாய்ட்ஸ் கிடைப்பதில்லை. மேலும் பச்சை கேரட்டுகளில் சில நச்சுக்களும் உள்ளது.

சமைத்த கேரட்:

கேரட்டை சமைத்து எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள விட்டமின் ஏ நமக்கு முழுவதுமாக கிடைக்கும். ஏனென்றால் விட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின் , இதனை எண்ணெய்  கொண்டு சமைக்கும் போது விட்டமின் ஏ கரைந்து நமக்கு கிடைக்கும். ஆனால் நார்ச்சத்து மற்றும் சில பைட்டோ கெமிக்கல்ஸ் குறைவாகத்தான் கிடைக்கும் .கிளைசிமிக் அளவும் அதிகரிக்கும்.

ஆகவே கேரட்டை நாம் வாரத்திற்கு நான்கு முறை வாங்குகிறோம் என்றால் இரண்டு முறை பச்சையாகவும் இரண்டு முறை சமைத்தும் சாப்பிட்டு வந்தால் அதன் முழு பலனையும் பெற முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Nithyananda
narendra modi donald trump
siraj
rain tn
Waqf Amendment Bill 2025
RCB vs GT