கோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்!
கோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்.
கோவக்காய் நமது சமையல்களில் பயன்படுத்தி இருப்போம். இந்த காய் உணவிற்காக மட்டும் அல்லாது, நமது உடலில் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கோவைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
தோல் நோய்
கோவைக்காய் தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சொரியாசிஸ், படை, சிரங்கு, தேம்பல் நோயிகளுக்கு தினமும் மூன்று வேலை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
தலைமுடி
தலைமுடி சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். தலையில் பொடுகு , முடி உதிர்வு, இவைகளுக்கு இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலும்பிச்சை பழத்துடன் சேர்த்து தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து, தலைமுடி நன்கு வளரும்.
பல்
பற்கள் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இந்த ஜூஸை குடித்து வந்தால், பல் வலி, ஈறுகளில் வலி-வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.