அடடே… இவ்வளவு நோய்களுக்கு மருந்தா பயன்படுகிறதா….? முள்ளங்கியின் முழுமையான பயன்கள் பற்றி அறியணும்னு ஆசைப்படுறீங்களா….?

radish

முள்ளங்கி நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்க கூடிய காய்கறி தான். இது நமது உடலில் பல நோயகளை நீக்கி ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய காய்கறியும் கூட. முள்ளங்கி ஒரு கிழங்கு வகையை சேர்ந்தது. இதனை உண்பதால் நமக்கு என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பது பற்றி பாப்போம்.

சத்துக்கள்:

முள்ளங்கி அதிகமான நீர்சத்து கொண்ட காய்கறி. இது நமது உடலுக்கு  அனைத்து சத்துக்களையும் கொண்டது. இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

பயன்கள் :

1.மலசிக்கல் :

உடலுக்கு அதிகமான வேலை கொடுக்காததால் மலசிக்கல் ற்படுகிறது. முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, செரிமான கோளாறுகளை நீக்கி, நீர்ச்சத்தை அதிகரிக்க செய்து மலச்சிக்கலை நீக்குகிறது.

2.இதய பிரச்சனைகள் :

முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்து வரும் போது, இதயத்தின் தசைகள் வலுவடைந்து இதய பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

3.மூலம் நோய் :

ஒரே இடத்தி அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களால் மூலம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால். தினமும் உணவில் முள்ளங்கியை சேர்த்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

4.வெண்குஷ்டம் :

வெண்குஷ்ட்டம் சிலருக்கு உடல் முழுவதும் இருக்கும். ஆனால் இந்த வெண்குஷ்டம் உடல் முழுவதும் பரவாமல் இருக்க முள்ளங்கி காயை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இது உடல் முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்துகிறது.

5.சுவாச கோளாறுகள் :

உணவில் அடிக்கடி முள்ளங்கியை சேர்த்து வந்தால் நுரையீரலை சுத்தப்படுத்தி, சுவாச கோளாறு பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது.

6.பூச்சி கடி :

முள்ளங்கி சாற்றை பூச்சி கடித்த இடத்தில் சிறு துளிகள் இட்டு தேய்த்தால் பூச்சி கடி குணமாகும்.

7.உடல் எடை குறைப்பு :

உடல் எடையை குறைக்க தினமும் காலையில் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

8.சிறுநீரக கற்கள் :

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் இரண்டு வேலை முள்ளங்கி ஜூ

ஸ் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu