பலருக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் மூக்கடைப்பு குளிர்காலங்களில் அதிகமாக ஏற்படும். இவற்றை வீட்டிலேயே எவ்வாறு சரி செய்யலாம் என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள்
உடலில் அதிக பித்தம் இருப்பது, ரத்தக்குழாய் சுருக்கம் ஏற்படுவதாலும், மன அழுத்தம், பயம், கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது மற்றும் பரபரப்பான வேலை முறை ஆகியவற்றால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.
ஆவி பிடித்தல்
தலைவலி என்றாலே மாத்திரைகள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை இவ்வாறு ஆவி பிடித்தும் சரி செய்து கொள்ளலாம்.
அரை லிட்டர் தண்ணீரில் அரை பகுதி எலுமிச்சம் பழத்தோல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்தத் தோல் வெந்து ஆவியாக வரும்போது எந்த பக்கம் தலைவலி உள்ளதோ அதாவது வலது பக்கம் தலை வலிக்கிறது என்றால் இடது பக்கம் மூக்கை அடைத்து வலது பக்க மூக்கின் வழியாக ஆவியை இழுத்து, அந்த வலது பக்கம் வழியாகவே மூச்சை வெளியே விட வேண்டும் இவ்வாறு பத்து முறை செய்ய வேண்டும். பிறகு வலது புறமாக மூச்சை இழுத்து இடது புறமாக வெளியிட வேண்டும் இவ்வாறு பத்து முறையும், இரு மூக்கின் வழியாகவும் முழு சுவாசத்தையும் உள் இழுத்து வெளிவிட வேண்டும் இவ்வாறு பத்து முறையும் மொத்தம் 30 முறை செய்தாலே தலையில் உள்ள நீர் வெளியேறி மூக்கடைப்பு மற்றும் ஒற்றை தலைவலி நீங்கும்.
எலுமிச்சையை வேக வைக்கும் போது அதிலிருந்து வெளியேறும் ஆவியானது ரத்தக்குழாயை விரிவடைந்து அழுத்தத்தை குறைத்து தலைவலியை சீராக்குகிறது.
இந்த முறையை ஐந்து வயது முதல் அனைவருமே பின்பற்றலாம். ஆவி பிடிக்கும் போது கண்களை திறந்து வைக்க கூடாது.
அதிகமாக வலி மாத்திரைகளை உட்கொண்டால் அது கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறு சிறு வலிகளுக்காக பெரிய வலியை நாமே ஏற்படுத்திக் கொள்ளாமல் முடிந்தவரை மாத்திரைகளை தவிர்த்து இதுபோல் எளிய முறைகளை பயன்படுத்தி நம்மை காத்துக்கொள்வோம்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…