அடேங்கப்பா..!விளக்கெண்ணையின் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்து போவீங்க..!

castor oil benefit

castor oil -விளக்கெண்ணையில் உள்ள மருத்துவ நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

விளக்கெண்ணெயின்  நன்மைகள் ;

விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாக  செயல்படும் மலச்சிக்கலை தடுக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது .மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் 15லிருந்து 30 எம் எல் அளவு காலை வெறும் வயிற்றில் வெது வெதுப்பான சுடு தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு மணி நேரத்திலே உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து நல்ல தீர்வை கொடுக்கும். மேலும் பத்து நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதால் ஆர்த்ரடீஸ் நோயின் பாதிப்பை குறைக்கும் .எலும்பு வலியை குறைக்கும். வீக்கத்தை குணப்படுத்தும்.

குதிகால் வலி, மூட்டு வலி போன்றவற்றையும் குணமாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி நோய் வாய்ப்பாடுவதை தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் சொரியாசிஸ் உள்ளவர்கள் விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தேய்த்து வரலாம் இது அரிப்பையும் குணப்படுத்துகிறது.

ரத்தத்தை தூய்மையாக்கும் மாதம் ஒரு முறை எடுத்துக் கொள்ளும் போது  சொரியாசிஸ்க்கு நல்ல தீர்வை காணலாம். மேலும் நாள்பட்ட  புண்களுக்கு   தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை  சம அளவு கலந்து தடவி வரலாம் .

இதில் உள்ள பினோலிக் ஆசிட் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் ஃப்ரீரெட்டிகள் செல் வளர்வதை தடுக்கிறது. புற்றுநோய் செல்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவாமல் இருக்கவும் உதவி செய்கிறது.

விளக்கெண்ணெய் கல்லீரல் உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கிறது. பேட்டி  லிவர் ,மஞ்சள் காமாலை போன்றவற்றையும் குணப்படுத்தும். மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளும் போது கல்லீரல் கழிவுகள்  சுத்தமாகிறது.

விளக்கெண்ணெய் பெண்களுக்கு பல வழிகளில் உதவி புரிகிறது .புருவ முடி வளராமல் இருப்பவர்கள் தினமும் இரவில் விளக்கெண்ணையை தடவி வரவும். தொடர்ந்து 60 நாட்கள் செய்யும்போது நல்ல அடர்த்தியான புருவ முடிகளை காணலாம்.

அது மட்டுமல்லாமல் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்று நினைப்பவர்களும் தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சம அளவு கலந்து தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்து வரலாம். இது ஆண்டி மைக்ரோபியல் தன்மையை கொண்டு உள்ளதால் பேன் தொந்தரவுகளையும் விரட்டியடிக்கிறது.

கருவளையம் சரியாக விளக்கெண்ணையை இரவில் கண்களை சுற்றி தடவி காலையில் முகம் கழுவி வரலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் மினுமினுப்பாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை தொப்புளில் இரண்டு சொட்டு விட்டு வந்தால் தொப்புள் உள்ள பெக்கோடிக் க்ளாண்ட் என்று சொல்லக்கூடிய முக்கிய சுரப்பி தூண்டப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்;

விளக்கெண்ணையை தினமும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடை  ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் குமட்டல், வாந்தி ,வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் ஏற்படுத்தும் .அதனால் 10 நாட்களுக்கு ஒரு முறை  15 லிருந்து 30 ml வரை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

சளி தொந்தரவு இருப்பவர்கள் மற்றும் ஆஸ்துமா ,சைனஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் விளக்கெண்ணையை மிகக் குறைவாகவும் வெயில் காலங்களிலும் பயன்படுத்துங்கள். ஏனென்றால் இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

பாருங்கள் சாதாரணமாக அனைவரது வீட்டிலும் கிடைக்கக்கூடிய விளக்கெண்ணையில் எவ்வளவு ஆச்சரியமூட்டும் நன்மைகள் உள்ளது. இதை நாம்  தெரிந்து கொண்டு முறையாக பின்பற்றி அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்