அடேங்கப்பா.!காலையில் தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா ?

drinking water

Drinking water-காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

தண்ணீர் :

தண்ணீர் என்பது பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான ஒன்று. இந்த தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடிக்கும்போது பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காலையிலேயே பல் கூட துலக்காமல் தண்ணீரை குடிப்பார்களாம் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாள் முழுவதும் அவர்கள் சோர்வடையாமல் இருக்கிறார்கள்.

காலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

ஒரு கிளாஸ் காலையிலேயே தண்ணீர் குடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே நமது உடல் மல  கழிவுகளை நீக்கி உடலை சுத்தம் செய்து விடும்.மலச்சிக்கல் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சியாக இருக்கும். இதனால் பசி தூண்டப்படும், மேலும் நம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை  உடல் உறுஞ்ச ஏதுவாகவும் இருக்கும்.

நீர்ச்சத்து குறைந்து விட்டாலே தலைவலி ஏற்படும். இப்படி தலைவலி தொந்தரவு இருப்பவர்கள் அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் விரைவில் தலைவலி வராமல் காத்துக் கொள்ளவும்.

வயிற்றில் உள்ள அதிக படியான அமிலத்தன்மையை  குறைத்து அல்சர் புண் வராமல் பாதுகாக்கும். மேலும் உடலில் 24 சதவீதம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.

நம் உடல் 70 சதவீதம் நீரால் ஆனது தான், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

நம் குடல்  சுத்தம் இல்லை என்றால் முகப்பரு ,மங்கு ,கருமை போன்று தோன்றும். இதனால் நம் முக அழகே  கெட்டுவிடும். இவற்றை தடுக்க தினமும் காலையில் தண்ணீர் குடித்து விட்டோம் என்றால் நாளடைவில் முகம் அழகாக மாறும், பருக்கள் ஏற்படாமலும் பாதுகாப்பும்.

நம் உடலில் நிணநீர் மண்டலத்தை  வலுவடைய செய்யும் ,இந்த நிணநீர் மண்டலம் தசை, நாளம், உறுப்புகளை ஒன்றிணைத்து செயல்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரு சிலருக்கு தண்ணீர் காலையிலே குடித்தால் வாந்தி ஏற்படும். இது குறிப்பாக உடலில் பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த நிலை வரலாம். இதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது .தொடர்ந்து குடிக்கும் போது நம் உடலில் உள்ள பித்தம் வெளியேறி நாளடைவில் வாந்தி ஏற்படுவது நின்றுவிடும்.

ஆகவே நம் எல்லோருக்குமே அழகாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் ஆசைப்படுவோம் .இதற்கு  தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்து வந்தாலே போதும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்