அடேங்கப்பா .!சோம்பு தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
சோம்பு தண்ணீர் -சோம்பு தண்ணீர் குடிப்பதால் நம் உடலின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
சோம்பு சமையலில் வாசனை பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை தண்ணீரில் ஊற வைத்து அல்லது கொதிக்க வைத்து குடிக்கும்போது பல அரிய நன்மைகளை நமக்கு தருகிறது.
சோம்பில் உள்ள சத்துக்கள்:
கால்சியம் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் ஈ ,வைட்டமின் கே, பொட்டாசியம் ,மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், செலினியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ,லூட்டின், பென்சோன் போன்ற இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது.
சோம்பை எடுத்துக் கொள்ளும் முறை:
ஒரு ஸ்பூன் சோம்பை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஒரு டம்ளராக வந்த பிறகு வடிகட்டி மிதமான சூட்டில் உணவுக்குப் பின் 10 நிமிடம் கழித்து குடித்து வரலாம் அல்லது அதை பொடியாக்கி மிதமான சூடான தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். பச்சையாகவும் சாப்பிட்டு வரலாம்.
சோம்பின் நன்மைகள்:
- சோம்பு தண்ணீரை உணவுக்கு பின் குடித்து வரும்போது புளித்த ஏப்பம், அதிக உணவு எடுத்துக் கொண்டால் ஏற்படும் குமட்டல், நெஞ்சக் கரிப்பு போன்றவை சரியாகும் .மேலும் மலச்சிக்கலையும் போக்கும் .அஜீரணக் கோளாறையும் சரி செய்யும்.
- அசைவ உணவுகளை எடுத்துக்கொண்ட பிறகு சோம்பை வாயில் போட்டு மென்று சுடு தண்ணீரை குடித்துக்கொண்டால் நன்கு ஜீரணம் ஆகிவிடும்.
- சோம்பில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் இருப்பதால் ரத்தத்தில் உள்ள நச்சுகளையும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
- உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
- உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சோம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரும் பொழுது தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பருமன் குறையும்.தொப்பையும் குறைக்கப்படும்.
- சோம்பு ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் உள்ளது. இது உடல் வலியை குறைப்பதோடு தசை வலி, மூட்டு வலி போன்றவற்றையும் குறைக்கிறது..
- சோம்பில் ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால் வாயில் போட்டு மென்று சாப்பிடும் போது வாயில் உள்ள துர்நாற்றத்தை நீக்குகிறது .
- ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவை அதிகரிப்பதோடு நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது. மேலும் மெலடோனின் உற்பத்தியை தூண்டி நல்ல தூக்கத்தையும் வரவழைக்கக் கூடியது.
- மனிடோல் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் கல்லீரல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
- தாய்ப்பால் குறைவாக சுரந்தால் சோம்பு தண்ணீரை குடித்து வரலாம். இது சிறந்த தாய்ப்பால் பெருக்கியாகவும் உள்ளது.
- அடிக்கடி சோம்பு தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தால் சர்க்கரை வியாதி நம்மை அணுகாது .
தவிர்க்க வேண்டியவர்கள்:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவுற முயற்சி செய்பவர்கள் சோம்பு தண்ணீரை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இது கரு கலைப்பை கூட ஏற்படுத்தும்.
எனவே சோம்பு தண்ணீரை உணவுக்குப் பின் குடித்து வரலாம் அல்லது டீ காபிக்கு பதில் வாரத்தில் மூன்று முறையாவது குடித்து வந்தால் அதன் நன்மைகளை பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம்.