White pumpkin juice-வெண்பூசணி சாறின் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்மில் பலரும் உணவை பசிக்காகவும் ,ருசிக்காகவும் தான் சாப்பிடுவோம். ஆனால் எத்தனை பேர் ஆரோக்கியத்திற்காக உணவை எடுத்து கொள்கிறோம் என்பது கேள்விக்குறி தான். அந்த வகையில் வெண்பூசணியை பலரும் உணவில் பயன்படுத்துவதில்லை ஆனால் அதில் உள்ள சத்துக்களோ ஏராளம்.
அறிவு ஆற்றலை மேம்படுத்தும்;
தினமும் ஒரு டம்ளர் வெண்பூசணி சாறை எடுத்துக் கொள்வதால் இதில் உள்ள போலைட் மூளையின் இயக்கத்தை சீராக்கி சுறுசுறுப்பாகுகிறது .இதன் மூலம் மூளையானது புத்தி கூர்மையுடன் செயல்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் புத்தி கூர்மை மேம்படும்.
கண் ஆரோக்கியம்;
மொபைல் போன் இல்லாமல் வாழவே முடியாத சூழ்நிலை வந்துவிட்டது. மொபைல் மூலம் வரக்கூடிய கதிர்வீச்சுக்கள் நம் கண்களின் விழித்திரைகளை பாதிக்கும் என்பது நமக்குத் தெரியும்.
ஆனாலும் நம்மால் அதை தவிர்க்க முடிவதில்லை இதற்கு பதில் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க வெண் பூசணியை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம்.
இனப்பெருக்க மண்டலம்;
விதை உணவுகள் அனைத்துமே இனப்பெருக்க மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் வெண் பூசணி முக்கியத்துவம் வாய்ந்தது. விதையோடு ஜூஸ் ஆக தயாரித்து குடிப்பதால் இதில் உள்ள நூண் சத்துக்கள் இனப்பெருக்க மண்டலத்தை வழுவாக்குகிறது.
மன அழுத்தம்;
அதிக வேலைப்பளு, அலைச்சல், உடல் அசதி, தூக்கமின்மை இதனால் பலரும் இன்று மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள். இந்த வெண்பூசணி சாறை எடுத்துக் கொள்ளும் போது செரட்டோனின் உற்பத்தி தூண்டப்படுகிறது. இதனால் மன அழுத்தம் ,பதட்டம் போன்றவை குறைக்கப்பட்டு நல்ல தூக்கத்தையும் வரவழைக்கிறது.
உடல் சூடு;
வெண்பூசணி சாறு குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் ,அதிக ரத்தப்போக்கு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் அதிக தாகத்தையும் குறைகிறது.
உடல் எடை குறைப்பு;
வெண் பூசணியில் குறைந்த கலோரியும் அதிக அளவு நீர்ச்சத்தும் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஜூஸை தேர்வு செய்யலாம். இது உடலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஜீரண மண்டலத்தையும் சீராக்குகிறது.
சிறுநீரக எரிச்சல்;
வெண்பூசணிக்கு சிறுநீரை பிரிக்கும் பண்பு அதிகம் உள்ளது .இது சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சிறுநீரக எரிச்சலை குணப்படுத்துகிறது .மேலும் சிறுநீரக கற்கள் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது என ஆராய்ச்சி கூறுகிறது .
நோய் எதிர்ப்பு சக்தி;
விதையோடு ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது விதைகளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுபடுத்துகிறது . இதில் ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்டதால் குடல் புண்களை ஆற்றக்கூடியது .வயிற்றில் உள்ள நாடா புழுக்களையும் வெளியேற்றுகிறது.
வெண்பூசணியின் தோலை நீக்கி சதை மற்றும் விதை பகுதியை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிது கொத்தமல்லி இலைகள் ,மிளகு ,பனைவெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் எதையுமே சேர்க்காமல் வெறும் பெண் பூசணி மட்டும் அரைத்து குடிக்கலாம் .
வெண்பூசணி குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் சளி, ஆஸ்துமா ,சைனஸ் உள்ளவர்கள் வெயில் காலங்களிலும் அல்லது எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம் அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இப்படி அதிக ஆரோக்கியத்தை அள்ளித் தரும் வெண் பூசணிச்சாரை அன்றாடம் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியத்தை பெறுங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…