சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 7 வழிகள்
- சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 7 வழிகள்
இன்றைய உலகில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய்க்கு ஒரு முடிவு தெரியாமல் அலைமோதுவோரின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்த சர்க்கரை நோய் வருவதற்கு முளைகள் தான். நம்மிடம் நோய் தோன்றுவதற்கு முழு முதல் கரணம் நாம் தான். தற்போது, நாம் இந்த பதிவில், சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
நன்றாக நடவுங்கள்
நம்முடைய உடல் ஆடி அசைந்து வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு 3 நாலாவது, குராய்ந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி வேகமாக நடக்க வேண்டும்.இப்படி நடப்பதனால் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவு குறைந்து, சர்க்கரை வராமல் நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.
சிகரெட்
மதுபோதைக்கு இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகி உள்ளனர். இந்த பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் கண்டிப்பாக இருக்கும். சிகரெட் குடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இறத்தல் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கான அணைத்து வழிகளையும் நாமே திறந்து விடுகிறோம்.
நொறுக்கு தீனி சாப்பிடாதீர்கள்
பெரியவர்களுக்கு நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் அதிகமாகி விட்டது. காலை முதல் மாலை வரை அமர்ந்திருந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தங்களை அறியாமலே தொடர்ந்து நொறுக்கு தீனி சாப்பிவிட்டு கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு நொறுக்கு உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்காகாமல் மாலையில் ஓடி, ஆடி விளையாடுவது நல்லது.
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்
நாம் சமையலுக்கு பயன்படுத்துகிற எண்ணெய் வகைகள் மூலமாகவும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த எண்ணெய்கள் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. மேலும் இது நமது உடலில் கெட்ட கொழுப்புகள் உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது.
பேக்கரி உணவுகள்
நம்மில் அதிகமானோருக்கு வீட்டில் செய்யும் உணவுகளை விட, பேக்கரியில் செய்யும் உணவுகளை தான் விரும்பி உண்கிறோம். பேக்கரியில் செய்யப்படும் உணவுகள் அனைத்துமே சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே பேக்கரியில் செய்யப்படும் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
வெந்தயம்
தினந்தோறும் நாம் 25 கிராம் முதல் 30 கிராம் வரை வெந்தயத்தை நமது உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. இவ்வாறு செய்யும் போது, நமது உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
5 வேளை சாப்பிடுங்கள்
தினந்தோறும் நாம் 3 வேலை சாப்பிட்டு வருகிறோம். இந்த மூன்று வேளை எந்த அளவு சாப்பிடுகிறோமோ, அதே அளவு உணவை 5 வேளையாக பிரித்து உண்ண வேண்டும்.