வரமிளகாயின் அற்புதமான மருத்துவ பயன்கள்….!!!
நாம் அன்றாட வாழ்வில் காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய் தான். மிளகாயில் ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என மூன்று வகைகளை கொண்டது. இவைகள் அனைத்தும் காரத்தன்மையால் வேறுபடுகின்றன. இவற்றில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
இரத்த ஓட்டம் :
மேலும் மிளகாய் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், ஜீரண கோளாறு உள்ளவர்களுக்கும் அவற்றை சரி செய்து உடலுக்கு நன்மை தரக்கூடியது. பெரியவர்களுக்கு உண்டாகும் தசைவலி தசைக்குடைச்சல் போன்ற வழியை போக்கும் தன்மை கொண்டது.
கிருமிகளை அழிக்க…!
வரமிளகாய் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. உடலில் வியர்வையை வெளியேற்றும் மாற்று இரத்த ஓட்டத்தினை அதிகரித்து உடலை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது. உடலுக்கு சராசரியான வெப்பத்தை அளித்து நன்மை தரக்கூடியது.
தோல் வியாதி :
தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால் ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி ஆகியவற்றையும் குணமாக்கும். பாகாடீரியாக்களுக்கு எதிராக செயல்படும். மிளகாயை உணவில் சேர்த்து கொண்டால் சாப்பிடும் போது வரும் வயிற்றுவலி, வாயு பிரச்சனைகள் தீரும். ஜீரண சுரப்பிகள் சுரப்பதற்கு உதவுகிறது.