"லிப் டு லிப்" ஜாக்கிரதை எய்ட்ஸ் வருமாம்..?
‘வாயோடு வாய் வைத்து வைத்து தரும் ‘பிரெஞ்சு கிஸ்’ ஆபத்தானது அல்ல. அதனால் எய்ட்ஸ் வராது. ஆனால் இருவரில் யாருக்காவது வாயில் வெடிப்பு, சிதைவு இருந்தால், கோளாறு ஏற்படலாம்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.எய்ட்ஸ் மோசமான நோய் என்பது உண்மைதான் என்றாலும், அது ஏற்படுவது பற்றிய சந்தேகங்கள் எல்லாம் இப்போது வெகுவாக நீங்கி விட்டன. எல்லோருக்கும் ஓரளவு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அரசு அமைப்புகள் பிரச்சாரம் தீவிரமாக இருப்பதால் மக்களிடம் விழிப்புணர்வு காணப்படுகிறது.
டில்லியில் மருத்துவ ஆய்வில் தெரியவந்த விவரம் வருமாறு: பொதுவாக முத்தம் தருவதால், அதிலும் வாயோடு வாய் வைத்து உதட்டோடு தரப்படும் முத்தத்தால் எந்த பாதிப்பும் வராது. வெடிப்பு போன்ற சிறு காயம் இருந்தால் கூட பாதிப்பு வரலாம். அதனால் டாக்டரிடன் காட்டி பரிசோதித்துக்கொள்வதுதான் நல்லது. பிரெஞ்சு கிஸ் எனப்படும் முத்தத்தை பொறுத்தவரை எந்த ஆபத்தும் கிடையாது. மனிதனுக்கு பசி எடுப்பது போல, செக்ஸ் பசி, இருபாலருக்கும் உண்டு. செக்ஸ் என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரின் டேஸ்ட்டை பொறுத்தது. ஒவ்வொருவரின் டேஸ்ட், அணுகுமுறை மாற்றம் உள்ளவை. தம்பதிகளைப் பொறுத்தவரை சிலர். ஒரு நாளைக்கு இருமுறை கூட உறவு கொள்வர். சில தம்பதியரோ, மாதத்துக்கு ஒரு முறை உறவு கொள்வது கூட அரிதாக இருக்கும்.
அவரவர் மகிழ்ச்சியை பொறுத்துத்தான் செக்ஸ் உறவு கொள்கின்றனர். சிலர் மாதக்கணக்கில் இடைவெளிவிட்டு செக்ஸ் உறவு கொண்டாலும், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையாது. எப்போது தேவையோ அப்போது அவர்கள் உறவு வைத்துக்கொள்வர்.ஆனாலும் பெரும்பாலானோரின் பொதுவான எண்ணம், செக்ஸ் என்பது தமக்கு போதுமான அளவில் இல்லை என்பது தான். தாங்கள் உறவு கொள்வதும் போதுமானதாக இல்லை. அடிக்கடி தேவைப்பட்டும் தங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறது என்றும் நினைக்கத்தான் செய்கின்றனர்.
இப்படிபட்ட செக்ஸ் உறவில் தம்பதியை பொறுத்தவரை எந்த பாதிப்பும் கிடையாது. முறை தவறிய, தவறான பழக்கங்களுடன் கூடியவருடன் தவறான உறவு கொள்ளும் போது தான் எய்ட்ஸ் பொன்ற பாதிப்பு வருகிறது. வாய்ப்புணர்ச்சி மூலம் எய்ட்ஸ் கிருமி பரவுகிறதா இல்லையா என்பது இன்னும் ஆய்வு அளவில் தான் உள்ளது. அதனால், வாய்ப்புணர்ச்சி தொடர்பாக முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்டு அனுபவிப்பது நல்லது. வாய்ப்புணர்ச்சி கொள்ளும்போது, சில முன்னெச்சரிக்கைகள் நிச்சயம் தேவை. இல்லாவிட்டால், எய்ட்ஸ் கிருமி பாதிக்க குறைந்த அளவில் வாய்ப்பு உண்டு. அது மட்டுமின்றி, வேறு சில பிரச்சனைகளும் வரலாம். குறிப்பாக ஹெபடைட்டி ஏ, பி மற்றும் சி வர வாய்ப்புண்டு என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.