மூட்டு வலியை போக்கும் தைலம் இனிமேல் வீட்டிலேயே செய்யலாம்..!
Joint pain- மூட்டு வலிக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்து தயாரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மருந்து தயாரிக்கும் முறை ;
வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் ,புங்கை எண்ணெய் , இலுப்பெண்ணை இவற்றை சம அளவு எடுத்து கொள்ளவும் . அதாவது விளக்கெண்ணெய் 20ml எடுத்தீர்கள் என்றால் மற்ற எண்ணெய்களையும் 20 ml எடுத்துக் கொள்ள வேண்டும் . இவற்றை மிதமான தீயில் காய்ச்சி ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
சாப்பிடும் முறை;
இந்த எண்ணெயை 5 சொட்டு வீதம் எடுத்து பாலிலோ அல்லது வெந்நீரிலோ கலந்து காலை மாலை என இருவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளி பூச்சாக பூசும்போது சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து எண்ணெயில் கலந்து பிறகு வலி உள்ள இடங்களில் தேய்த்துக் கொள்ளலாம். உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளும் போது கற்பூரம் சேர்க்கக்கூடாது.
இந்த மருத்துவம் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர் அறிவுறுத்தலின்படி கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில் சத்து குறைபாட்டால் ஒரு சிலருக்கு நரம்புகளின் வலி ஏற்படும் அந்த சமயங்களில் இந்த மருந்தை உள் மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் . வாதம் இருப்பவர்களுக்கு எலும்பு வலி அல்லது ஏதேனும் ஒரு வலி இருக்கும். அந்த சமயங்களிலும் இந்த மருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயால் ஏற்படும் பாத எரிச்சல், தோல் எரிச்சல் இருக்கும் நேரங்களிலும் வெந்நீரில் 5 சொட்டு கலந்து இந்த எண்ணையை எடுத்து உட்கொள்ளலாம். இதன் மூலம் எரிச்சல் குணமாகும். மலச்சிக்கலுக்கும் இது சிறந்த நிவாரணியாக இருக்கும். இப்படி எளிதில் கிடைக்கக்கூடிய சுலபமாக தயாரிக்கக்கூடிய இந்த மருந்தை உள் மருந்தாகவும் ,வெளி பூச்சாகவும் பயன்படுத்தினால் மூட்டு வலியில் இருந்து தசை வலி வரை பறந்து போய்விடும்.