நீங்க அதிகம் நேரம் தூங்குபவரா…? அப்ப குறைந்த நேரம் தூங்குபவரா…? உங்களுக்கு என்ன நேரிடும் தெரியுமா….?

sleeping

தூக்கம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாதது . இது நமது வாழ்வில் கலந்த ஒன்று. ஆனால் தூங்கும் விதமும், முறைகளும் சரியான முறையில் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் தூங்கும் போது அது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் தரும்.

அதிக நேரம் தூங்குவதும் ஆபத்து….!! குறைந்த நேரம் தூங்குவதும் ஆபத்து….!!

அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தினமும் இரவு ஆறு மணி முதல் எட்டு மணி வரை தூங்கவேண்டும் என்று கூறுகின்றனர்.அவ்வாறு தூங்காவிட்டால் இதய நோய் பிரச்சினைகளும், பக்கவாத பாதிப்பும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தூங்கும் நேரம் முக்கியமானது…!!!

தூங்குவதற்கு ஒரு குறிபிட்ட நேரம் உள்ளது. அனைவரும் கண்டிப்பாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.இந்த நேரத்தை கடந்து 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு 5 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் ஒன்பது முதல் 10 மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 17 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 41 சதவீதம் அதிகமாக இருக்கும்.

குறைவான தூக்கம்…! அதிகமான பாதிப்பு…!

அதுபோல் ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 9 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் தூங்கும் நேரம் மிகவும் முக்கியமானது. சரியான நேரத்திற்கு தூங்கி சரியான நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்