மனிதனுடைய வாழ்வில் தண்ணீர் ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. உணவை விட நீர் மிக முக்கியமான ஒன்று. மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது.
நம் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். தாகம் எடுப்பது, நாக்கு வறண்டுபோவது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, தலைவலி ஏற்படுவது, வியர்ப்பது, குழப்பான மனநிலை போன்றவை உடல்வறட்சி ஏற்பட்டுள்ளதற்கான மிக முக்கியமான அறிகுறிகள்.
உடல் நலக்குறைவு :
உடலில் ஏற்படும் சில நோய்களும் நீர்ச்சத்து குறைவதற்கான காரணியாக இருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி, தீக்காயங்கள், உடல் சூடு, காய்ச்சல், அதிக வியர்வை, சர்க்கரை நோய் பாதிப்பு, போதிய அளவு நீர் அருந்தாமை போன்றவைதான் இதற்கான காரணங்களாக இருக்கும்.
இதனை கவனிக்காமல் விட்டால், நீர்ச்சத்து குறைபாடு முதிர்ச்சி நிலையை அடையும். இது, சிறுநீரக செயலிழப்பு, உணர்விழந்த முழு மயக்க நிலை, அதிர்ச்சி நிலை, அதீத காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து அளவு குறைவதாக உணர்கிறவர்கள், சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அருந்த வேண்டும். எலக்ட்ரால் அல்லது ஜூஸ் வகைகளையும் அருந்தலாம். உடல் வறட்சி என்பது இயல்பாக ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றுதான் என்றாலும்கூட, கவனிக்கப்படாத பட்சத்தில், அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் நல்லது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…