தோல்நோய்களை தீர்க்க தோள்கொடுக்கும் தேள்கொடுக்கு…!!!
இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வே ஒரு எந்திரமயமான வாழ்க்கையாக மாறிவிட்டது. அதே போல இயற்கையின் கால சூழ்நிலைகளும் மாறுபட்ட நிலையிலேயே காணப்படுகிறது. அதிகமான வெப்பத்தால் இன்று மருத்துவர்களே கண்டறிய முடியாத தோல் நோய்களெல்லாம் ஏற்படுகிறது. இதற்க்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பதே சிறந்ததாக கருதுகின்றனர்.
தோல் நோய் :
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட தேள்கொடுக்கு இலையானது உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. தோல்நோய்களை குணப்படுத்தும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். காய்ச்சலை தணிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தை போக்குகிறது. மாதவிலக்கு, வெள்ளைப்போக்கு பிரச்சனையை சரிசெய்கிறது. இதற்கான மருந்தை நாமே தயாரா செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
- தேள்கொடுக்கு இலை
- தேங்காய் எண்ணெய்
- மஞ்சள்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் தேள்கொடுக்கு இலை பசையை சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி மஞ்சள் சேர்க்கவும். இந்த தைலத்தை பூசிவர அரிப்பு, சொரி, சிரங்கு போன்றவற்றை குணமாகும். தேள்கொடுக்கு இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.