தெவிட்டாத தேனில் உள்ள மருத்துவ குணங்கள்
- தேனில் உள்ள மருத்துவ குணங்களும், அதன் மூலம் குணமாகும் நோய்களும்.
தேன் நாம் அனைவரும் அறிந்த மற்றும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பொருளாகும். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தேனை விரும்பி உண்பது உண்டு. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியது.
பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது.
சித்த மருத்துவ முறையில் தேன்
அலர்ஜி
சித்த மருத்துவ முறையில், தேன் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 தேக்கரண்டி தேனுடன் இரு குறு மிளகு பொடித்து உணவுக்கு முன் அன்றாடம் உட்கொண்டு வந்தால், பூரண விடுதலை பெறலாம்.
தொண்டை
தொண்டையில் பிரச்னை உள்ளவர்களுக்கு தேன் ஒரு மருந்தாக பயன்படுகிறது. குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு மற்றும் வெற்றிலை சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை உட்கொண்டு வந்தால் பூரண விடுதலை அடையலாம்.
இரத்த சோகை
இரத்த சோகை உள்ளவர்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும். குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது.
மேலும், இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும், கொலஸ்டிரால் குறையவும் செய்கிறது.
உடல் எடை
உடல் எடையை குறைப்பதில் தேன் முக்கிய பங்கினை வகிக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.மேலும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
உயிர்கொல்லி நோய்களுக்கு கூட மருந்தாகும்
மருந்துகளால் கூட சுகம் தர முடியாத நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது தேன். கேன்சரைத் தடுக்கும், ஈரலை பாதுகாக்கும், இதயத்தைக் காக்கும், சர்க்கரை நோய்கூட வராமல் தடுக்கும் இனிப்பான உணவு ஒன்று உண்டென்றால், அது `தேன்` மட்டுமே.