செம்பருத்தி பூ உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?
செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை.
இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
தலைமுடி
தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த மருந்தாகும். செம்பருத்தி பூவின் சாறுடன் சம அளவில் எண்ணெய் கலந்து, வாணலியில் காய்ச்சி, ஒரு கண்ணாடியில் பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
பின் இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைமுடிக்கு வைத்து வந்தால், முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
மாதவிடாய் பிரச்சனை
மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தஹ போக்கினை தடுக்க, செம்பருத்தி பூவின் 10 இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
இதய பிரச்னை
இதயம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனமானவர்கள் ஆரோக்கியம் பெறுவார்.
சரும பிரச்சனை
சரும பிரச்சனை உள்ளவர்களுக்கு செம்பருத்தி பூக்கள் மிக சிறந்த மருந்து.செம்பருத்தி பூ குளிர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை பொருந்தியது. இந்த பூவை சாப்பிடுவதாலும், அரைத்து சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து செய்து உடலை பளபளக்க செய்யும்.
இரும்புசத்து
இரும்பு சத்து குறைபாட்டால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இரும்புசத்து குறைபாடு உள்ளவர்களுக்கு, இந்த பூ ஒரு சிறந்த மருந்தாகும். செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிப்பதோடு, இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.