சீனியர் சிட்டிசன்களின் ஆயுளை அதிகரிக்கும் உணவு வகை..!!

Published by
Dinasuvadu desk

வயது முதிர்ந்தவர்களுக்கு, பாரம்பரிய மத்திய தரைகடல் உணவுமுறை (Mediterranean diet) பின்பற்றினால் இறப்பின் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் உள்ள ஐ.ஆர்.சி.சி.எஸ் (I.R.C.C.S)-ன் நோய் தொற்று மற்றும் நோய்த்தடுப்பு துறையின் மூலமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 65 வயதுக்கு மேற்பட்ட 5,200 பேர் இதில் கலந்துகொண்டனர். மத்திய தரைக்கடல் உணவுமுறையில் (Mediterranean diet) இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாகுவதற்கான அபாயங்கள் எந்தளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது.

8 ஆண்டுகளாக மத்திய தரைகடல் உணவுமுறையை பின்பற்றுகிறவர்கள் தங்களின் டயட் ஸ்கோரை ஆய்விற்கு கொடுத்துள்ளனர்.ஆய்வின் முடிவு, மத்திய தரைக்கடல் உணவு முறையில் 25 சதவீதம் இறப்பிற்கான அபாயங்களை எல்லா வகையிலும் குறைக்கிறது. இதய நோயான கரோனரி ஆர்ட்டெரி  நோய் (Coronary Artery Disease) மற்றும் செரிபரோவாஸ்குலர் நோய் (Cerebrovascular Disease) ஆபத்துகள் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள், இத்தாலி உட்பட 65 நாடுகளில் 65 வயதுக்கு  11,738 பேர் தரவுகளை பகுப்பாய்வு செய்து 7 ஆய்வுகளை செய்துள்ளனர். இந்த ஆய்வில், மத்திய தரைக்கடல் உணவுமுறையின் டயட் ஸ்கோர் அதிகரிக்கும் பொழுது 5 சதவீதம் இறப்பிற்கான அபாயங்கள் குறைவதாக கண்டுபிடித்துள்ளனர். மத்திய தரைக்கடல் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு இறப்பு அபாயம் குறைவாக உள்ளது என்று கூறுகின்றனர்.

ஆய்வாளர் மாரியலோரா பொனாக்சியோ, ”மத்திய தரைக்கடல் உணவு முறை இறப்பின் அபாயத்தை குறைக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அது குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இறப்பு அபாயத்தை குறைக்கும் என்பதை கண்டறிந்ததுதான் ஆய்வின் புதுமை” என்று கூறுகிறார்.
பாரம்பரிய மத்திய தரைகடல் உணவு முறையில் அதிகமான பழங்கள், காய்கறிகள், மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்வதே. பால் மற்றும் இறைச்சியின் பயன்பாடு குறைவாக இருக்கும்.

உணவு உட்கொள்ளும் நேரத்தில் மிதமான ஆல்கஹால் கொண்ட ஒயினை அருந்துவதும் இதில் அடங்கும்.
ஆய்வாளர் பொனாக்ஸியோ, மத்திய தரைக்கடல் உணவு முறையின் ஆரோக்கியத்தின்  பங்கை மிதமான ஆல்கஹால் கொண்ட ஒயின்தான் செய்கிறது என்று ஆய்வின் சுவாரஸ்யமான தகவலை கூறுகிறார். இந்த தகவலை தொற்றுநோய் மற்றும் வளர்சிதை மாற்ற ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவிப்பதாகவும் கூறுகிறார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

2 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

3 hours ago

இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…

4 hours ago

கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி? செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும்  சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…

5 hours ago

“அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!” ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு!

டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை  முன்வைத்துள்ளனர். அவர்…

5 hours ago

“ஹம்மா ஹம்மா பிடிக்கலைனு சொன்னாரு”…ஏ.ஆர்.ரஹ்மானால் வேதனைப்பட்ட ராப் பாடகர்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…

6 hours ago