நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆனால், அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருப்பது நமது கையில் தான் உள்ளது. நமது முன்னோர்கள் தானிய வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்ததால் தான் அவர்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்தனர்.
இந்நிலையில், கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில், வெயில் காலங்களில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடிய ஆற்றலை கொண்டது.
தற்போது கேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
கேழ்வரகில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதில் பாலிஃபினோல்ஸ் மற்றும் ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இன்சுலினை அதிகரிக்கக் கூடிய க்ளைசெமியா அமிலத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை அதிகம்.
மேலும், நிரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் மாறியுள்ளது. கேழ்வரகில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் செல்களை தாக்கக் கூடிய புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளது.
மேலும், முகம் விரைவில் முதுமைத் தோற்றத்தை அடைவதையும் கட்டுப்படுத்தும். செல்களை புத்துயிருடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
கேழ்வரகு இதயம் சம்பந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளதால், இதய நரம்புகளின் செயல்படுகளை பராமரித்து சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தொடர்ந்து கேழ்வரகினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மிக விரைவில் குறைந்து விடும். ஏனென்றால் இதில், நார் சத்து மற்றும் அமினோ ஆசிட் த்ரியோனைன் கல்லீரல் வெளியிடும் கொழுப்பை கரைத்து சுத்திகரிக்க உதவுகிறது.
இதனால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
கேழ்வரகினால் செய்யப்பட்ட உணவினை அனுதினமும் உட்கொண்டு வந்தால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க செய்கிறது. மேலும், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
கேழ்வரகினால் செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் பலப்படும். மேலும், எந்த விதமான நோய்களும் நமது உடலை தாக்காதவாறு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…