ஊறுகாய் என்றாலே ரொம்ப பிடிக்கும்ல….!!! அதில் என்னென்ன நன்மை தீமைகள் உள்ளது தெரியுமா…?

Pickles

நம்மில் பலருக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரது வழக்கமாக உள்ளது. மேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது நம் அனைவரின் வழக்கம். நாம் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தும் ஊறுகாயில் உள்ள நன்மை, தீமைகள் பற்றி பார்ப்போம்.

ஆண்டி ஆக்சிஜென்ட் :

ஊறுகாயில் அதிக அளவு ஆண்டி ஆக்சிஜெண்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் நமது உணவில் உள்ள இராசாயனங்களால் உண்டாகும் தீமைகளை குறைக்க இது உதவுகிறது,

செரிமானத்திற்கு உதவுகிறது :

ஊறுகாயில் உள்ள ப்ரோபியோடிக் பாக்டீரியாக்களை கொல்ல இவை உதவியாக இருக்கிறது. வினிகர் பயன்படுத்தாலியற்க்கையாகவே உப்பு சேர்த்து புளிக்க வைக்கப்பட்ட ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது.

சர்க்கரையை கட்டுப்படுத்தும் :

வினிகர் கொண்ட ஊறுகாய்களை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.

ஜீரண சக்தி :

சிரிய மற்றும் பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கின்றன. இந்த ஊறுகாய்கள் ஆயுர்வேத அடிப்படையிலும் பரிந்துரைக்கப்படுகிறது. அதிகமானோர் ஊறுகாயை ஜீரணமாவதற்காக சாப்பிட்டு வருகின்றனர்.

நெல்லிக்காய் ஊறுகாய் ஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல் இதில் உலா ஆற்றல் கல்லீரலை பாதுகாக்கவும் உதவுகிறது. ஒரு ஆய்வில் கல்லீரல் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கு நெல்லிக்காய் கொடுத்ததன் மூலம் அவற்றின் கல்லீரல் நல்ல நிலைக்கு மாறியது கண்டறியப்பட்டுள்ளது.

தீமைகள் : 

ஊறுகாய் என்றாலே அதில் உப்பு தன்மை அதிகமாக இருக்கும். இவை சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் இந்த உப்பு தேவையற்ற பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளிடம் இருந்து ஊறுகாயை காப்பாற்றுகிறது.

இருப்பினும் அதிக அளவு உப்பை உணவில் சேர்ப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. இதய பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.

ஊறுகாயில் அதிக அளவு எண்ணெய் சேர்க்கப்படுவதால்,இது கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. எனவே ஊறுகாயை மிக குறைந்த அளவு எடுத்துக்கொள்வது அல்லது எப்போதாவது சாப்பிடுவது மிக சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்