உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா ? அப்ப இது மட்டும் போதும்
- வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்.
இன்றைய சமூகத்தில் மறதி என்பது ஒரு தேசிய நோயாக மாறிவிட்டது. ஞாபக சக்தி குறைவாக இருந்தாலே அது நமக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயங்களை கூட நாம் எளிதில் மறந்து விடுவோம்.
இதனால், நாம் எல்லோரிடமும் திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சனை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், இதில் இருந்து நாம் வெளி வருவதற்கு இயற்கையான உணவு முறைகள் பயன்படுகிறது.
ஞாபக சக்தி
ஞாபக சக்தியை அதிகரிக்க செய்வதில், வல்லாரை கீரை ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நினைவாற்றல் அதிகரித்து, மராத்தி நோயில் இருந்து விடுதலை பெறலாம். மேலும் இது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வல்லாரை கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்த கீரையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.
மூளை நரம்புகள்
நமது மூளை சுறுசுறுப்பாகவும், மூளை நரம்புகள் பலமாகவும் இருப்பதற்கு தினந்தோறும் காலையில் வல்லாரைக்கு கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால், மூளை நரம்புகள் பலப்படும்.
குடல் புண்
சரியான நேரத்திற்கு சாப்பிடாததால், பலருக்கு குடலில் புண் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், வல்லாரைக் கீரையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கினாள், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மாலைக்கண் நோய்
மாலைக்கண் நோய் உள்ளவர்கள் வல்லாரை கீரையை, ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நன்கு அரைத்து, வாயில் போட்டு பசும்பால் குடித்து வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
இரத்தசோகை
இரத்தம்சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதில் வல்லாரை கீரை ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது இரத்த சோகை நோயை குணப்படுத்து, இரத்தத்திலஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.
தோல் வியாதிகள்
தோல் சம்பந்தமான வியாதி உள்ளவர்களுக்கு வல்லாரை கீரை ஒரு சிறந்த மருந்தாகும். வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் நீங்குகிறது.