இலந்தை பழத்தின் ஒப்பில்லா மருத்துவ குணங்கள்
- இலந்தை பழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள்.
இயற்கை என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம். இறைவன் கொடுத்த பழ வகைகள் அனைத்துமே நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
இந்நிலையில், நாம் இலந்தையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இலந்தையில் இரண்டு வகையான பழங்கள் உள்ளது. ஒன்று காட்டு இலந்தை, மற்றோன்று நாட்டு இலந்தை.
தற்போது சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு வகை ஆகும். தற்போது இந்த இலந்தையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
இலந்தையில் பல வகையான சத்துக்கள் உள்ளது. இதில், புரதசத்து, மாவுசத்து, நார்சத்து, மற்றும் இரும்புசத்து போன்ற சத்துக்கள் உள்ளது.
உடல் சூடு
கோடை காலங்களில் இலந்தை பலத்தை நாம் அதிகமாக சாப்பிடலாம். ஏனென்றால் இது உடலின் வெப்பத்தை தணிக்க கூடிய ஆற்றல் கொண்டது. குளிர்ச்சியான உடல் வாகு உள்ளவர்கள் இதனை அதிகமாக சாப்பிடக் கூடாது.
பித்தம்
இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இது உடலில் உள்ள பித்தத்தை குறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. பித்தம் அதிகரிப்பால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். பித்த அதிகரிப்பால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தவும் இது உதவுகிறது.
எலும்பு
இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும். எலும்பு உடலில் சுண்ணாம்புச் சத்து குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இலந்தையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இது உடல் எலும்புகளுக்கு வலிமையை அளிக்கிறது.
செரிமானம்
இன்று அதிகமானோர் செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு இலந்தை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
உடல் வலிமை
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். உடலை உற்சாகப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் சோர்வாக இருக்கும் போது இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்.