இந்த இலையை சாதாரணமா நெனச்சீராதீங்க, கொத்தமல்லியில் உள்ள கொழுமையான நன்மைகள்

Default Image
  • கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும்.

கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

Related image

இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

வயிற்று பிரச்சனைகள்

கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது. கொத்தமல்லியில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது.

Related image

மேலும், இது செரிமான பிரச்சனைகளை நீக்கி, செரிமான ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு, கொத்தமல்லி பெரிதும் உதவுகிறது. பெண்களின் கர்ப்ப காலத்தி தொடக்கத்தில், வாந்தி, தலைசுற்றல், உடல்சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.

Image result for கர்ப்பிணி பெண்களுக்கு

இந்த சமயங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

கொழுப்பு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொத்தமல்லி சிறந்த உணவாகும். கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.

Image result for கொழுப்பு

மேலும், கொழுப்பினால் உண்டாகும் நோய்களை நீக்கி, உடல் பருமன் அதிகரிப்பையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய நோய்கள்

கொத்தமல்லி இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயம் நன்றாக இயங்குவதற்கும் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்கவும் இது உதவுகிறது.

Image result for இதய நோய்கள்

மேலும், கொத்தமல்லி ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. எனவே கொத்தமல்லி சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை.

வாய்ப்புண்

அடிக்கடி வாயில் புண் ஏற்படுபவர்களுக்கு கொத்தமல்லி ஒரு சிறந்த மருந்து. கொத்தமல்லியில், சிட்ரோநெல்லோல் எனப்படும் சிறப்பான கிருமிநாசினித் வேதிப்பொருள் உள்ளது.

Image result for வாய்ப்புண்

இது வாயில் வாயிலுள்ள புண்கள் ஆறவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்