அடடே… வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் வியக்கத்தகு மாற்றங்கள்…!!!

Published by
லீனா

தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. உணவில்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ்வது  மிகவும் கடினம். அதிலும் வெந்நீர் குடிப்பதினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

 

வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது.

சரும பிரச்சனைகள் :

Image result for சரும பிரச்சனைகள் :

 

வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக்  கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். பருக்கள் படாதபாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். முகமும் பொலிவடையும்.

கொழுப்பை கரைக்கிறது :

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும். நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும்  வெந்நீரில் கரைந்து விடும்.

இரத்த ஓட்டம் :

இரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச்சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சூட்டில் நீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல்  இயக்கம் அதிகரிக்கும்.

தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

இளமை தோற்றம் :

 

உடலிலும் சருமத்திலும் தேவையில்லாமல் இருக்கும் நச்சுப் பொருட்கள் தான் விரைவில் வயதான தோற்றம் உருவாவதற்கு காரணம். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருட்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும்.

Published by
லீனா

Recent Posts

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

19 minutes ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

22 minutes ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

1 hour ago

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

3 hours ago

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

3 hours ago

வெளியானது ‘7/G ரெயின்போ காலனி 2’ அப்டேட்.! புத்தாண்டில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்.!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…

3 hours ago