அடடே… புடலங்காயில் இவ்வளவு நன்மைகளா…? இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!!

snake gourd

புடலங்காய் நாம் அனைவரும் அறிந்த ஒரு காய்கறி தான். புடலங்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி தான். புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், அதிக ஆற்றலையும் தருகிறது.

சத்துக்கள் :

புடலங்காயில் அதிகமாக நீர்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள், புரோட்டின்கள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் கரோடீன், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல சத்துக்கள் உள்ளது.

பயன்கள் :

சர்க்கரை நோய் :

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் இது மிகசிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

உடல் எடை குறைப்பு :

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுவோர், எடையை குறைப்பதற்கு பல வழிமுறைகளை தேடுவதுண்டு. அந்த வகையில் உடல் எடையை குறைப்பதில் புடலங்காய் மிக முக்கிய பங்காற்றுகிறது.

மஞ்சள் காமாலை :

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் நீருடன் புடலங்காய் இலை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுதலை அளிக்கிறது.

இதய கோளாறு :

இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்த 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும்.

குடல் பிரச்சனை :

புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடலில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்