அடடே… இவ்வளவு நன்மைகள் இருக்குதா…? அத்தியின் அற்புதமான நன்மைகள்….!!
இயற்கை நமக்கு கடவுள் கொடுத்த வரம். கடவுள் படைத்த அனைத்து செடி, கொடிகளிலும் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்கிறது. இவை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இப்பொது நாம் அத்தியின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
அத்தி :
அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் ப்ரோடீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புசத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அத்தி மரம் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு மரம். இந்த மரத்தின் இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் கொத்தாக தோன்றும். காய் பழுத்த பின் கொய்யா பழத்தை போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
மருத்துவ குணங்கள் :
அத்திமரத்தின் இலை, பால், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் மிக்கது. உலர வைத்து பொய்த்த இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களை குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும்.
வாயில் ஏற்படும் பிரச்சனைகள் :
வாய்ப்புண்,ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராக குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.
நுரையீரல் :
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து, சுறுசுறுப்பை தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல் நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழம் தின்பதால் வாயனாராம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
குறிப்பு :
சிறுநீரகக்கல் உள்ளவர்கள் அத்தி பலத்தை தவிர்க்கவும். எந்த வகையிலும் அத்தியை பயன்படுத்த கூடாது.