Hair Fall : பெண்களே..! முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இதோ தீர்வு..!

hairfalls

பெண்களுக்கு முடி தான் அழகு. முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும். ஆனால், முடி உதிர்வு பிரச்சனையை குறித்து பெரிதும் கவலைப்படுவது பெண்கள் தான். முடி உதிர்வு பிரச்னை சில பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் பெரும்பாலும் கடைகளில் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதைவிட, இயற்கையான பொருட்களை பயந்துவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யக்கூடிய ஒரு ஹேர்பேக் பற்றி பார்ப்போம்.

தேவையானவை 

  • பூசணி விதை – 1 கப்
  • முட்டை – 2
  • தயிர் – 4 ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு மிக்ஸியில் ஒரு  பூசணி விதை, முட்டை, தயிர், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பேஸ்ட் போல நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : Sleep : நீங்கள் குப்புற படுத்து தூங்குவதால் இந்த பிரச்னைகளெல்லாம் ஏற்படுமா..? வாங்க பார்க்கலாம்..!

பின் உங்களது தலையை நன்கு கழுவிய பின், இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படி அப்ளை செய்ய வேண்டும். இந்த ஹேர் பேக்கை தினமும் போட வேண்டும். இதனை நாம் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்காவது உபயோகப்படுத்தி வந்தால் நல்ல பலனை பார்க்க முடியும்.

எனவே முடி உதிர்வு மற்றும் முடி சம்பந்தமான மற்ற பிரச்னை உள்ளவர்கள் இந்த ஹேர்பேக்கை தொடர்ந்து உபயோகித்து வந்தால் இயற்கையான முறையிலேயே நல்ல முடி வளர்ச்சியை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir