Guava Fruit : செம டெஸ்ட்..! கொய்யா பழத்தை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க..!

Guava fruit

கொய்யாப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். கொய்யா பழம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் கொய்யாப்பழத்தை (Guava Fruit) வைத்து செய்யக்கூடிய வித்தியாசமான ஜூஸ் பற்றி பார்ப்போம்.

தேவையானவை 

  • கொய்யாப்பழம் – 2
  • பால் – அரை கப்
  • நாட்டு சர்க்கரை – 2 கரண்டி
  • பாதாம் – 3

செய்முறை 

முதலில் கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு மிக்ஸியில் வெட்டிய கொய்யாப்பழத்தை போட்டு, பால், நாட்டு சக்கரை இவற்றை கலந்து நன்கு  அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் அரைத்த கலவையை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டம்ளரில் வடிகட்டி வைத்துள்ள கலவையில், நடுங்கி வைத்துள்ள பாதாமை தூவி குடித்தால் சுவையாக இருக்கும். கொய்யாப்பழத்தை இதுவரை நாம் சாதாரணமாகவோ அல்லது தூள் தூவியோ சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் வித்தியாசமான  முறையில்  இவ்வாறு சாப்பிடும்போது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்