பச்சை பயரில் அசத்தலான சாலட் செய்வது எப்படி..? வாங்க பார்க்கலாம்…!
பொதுவாக முளைகட்டிய தானியங்களை சாப்பிடும்போது அதன் சத்துக்களும் 2 மடங்கு நாம் உடலுக்கு கிடைக்கும். காய்கறி சாலட், பழங்கள் சாலட் என பலவகை சாலட்கள் இருந்தாலும் இன்று நாம் பச்சைபயிறு சாலட் பற்றி பார்ப்போம்.
பச்சைபயரில் அதிக அளவு புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின் சி வைட்டமின் கே கால்சியம் பொட்டாசியம் தாமிரம்,தயமின், நியாஸின், நார்ச்சத்து, போலிக் ஆசிட், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகியவை அதிகம் உள்ளன.
தேவையான பொருட்கள்
- முளைகட்டிய பச்சைப்பயிறு அரை கப்
- கேரட்=1/4 கப்
- உலர் திராட்சை=15
- தேங்காய் துருவல்=3 ஸ்பூன்
- நாட்டு சக்கரை சிறிதளவு
- ஊற வைத்த பாதாம் =10
- உப்பு =1/2 ஸ்பின்ச்
செய்முறை
பச்சைப்பயிறு, உலர் திராட்சை, கேரட், தேங்காய் துருவல், நாட்டு சக்கரை, உப்பு பாதாம் பருப்பு அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்யவும். இப்பொழுது நமக்கு சத்தான ஆரோக்கியமான சாலட் ரெடி.
இந்த சாலட்டை நாம் வீடுகளிலேயே செய்து சாப்பிடும் போது ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் காணப்படும். இதனை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு காலை நேரம் முதல் உணவாக கொடுப்பது சிறந்தது. இதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது நம் உடல் அதன் சத்துக்களை முழுமையாக உறிஞ்சுகிறது.
தவிர்க்க வேண்டியவர்கள்
- மூச்சுத்திணறல் அரிப்பு குமட்டல் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
- சிசேரியன் செய்த பெண்கள் முதல் ஆறு மாதம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
- குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஒருவேளை உணவாக எடுத்துக்கொண்டு பயன்பெறலாம்.