மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் நீங்க சூப்பரான டிப்ஸ்..!

nose white heads

Whiteheads-மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் மற்றும் கருப்பு அரும்புகளை நீக்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை காணலாம்.

வெள்ளை அரும்புகள் நீங்க டிப்ஸ்:

சுடு தண்ணீரில் ஒரு துணியை நனைத்து மூக்கின் மீது ஒத்தடம் கொடுக்கவும், இவ்வாறு செய்யும்போது மூக்கில் உள்ள சிறு துளைகள் திறக்கப்பட்டு இறந்த செல்கள் வெளியேறி நாம் பயன்படுத்தும் குறிப்புகள் நன்கு வேலை செய்யும்.

தேங்காய் எண்ணெயுடன், அரிசி மாவு கலந்து மூக்கில் மசாஜ் செய்யவும். கீழ் உதட்டின் கீழ்பகுதியிலும் ஒரு சிலருக்கு வெள்ளை அரும்புகள் இருக்கும், அங்கும் தடவி மசாஜ் செய்து கொள்ளவும் .சிறிது நேரம் கழித்து அதை கழுவி விட்டு, ஒரு துணியால் துடைத்து எடுத்தால் வெள்ளை அரும்புகள் வெளியேறிவிடும்

தேங்காய் எண்ணெயில் வேப்பிலையை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து அந்த எண்ணெயை மூக்கில் போட்டு வந்தால் நாளடைவில் வெள்ளை அரும்புகள், கருப்பு அரும்புகள் குறையும்.

தினமும் குளித்து முடித்த பிறகு ஒரு துணியால் மூக்கு பகுதியை சுத்தம் செய்தால் இதுபோல் வராது.

மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்:

மூக்கின் தோல் பகுதியில் சிறு சிறு துளிகள் உண்டாகி அதை சுத்தம் செய்யாவிட்டால் அதிலிருந்து வெள்ளை அரும்புகள் தோன்றும். அது நாளடைவில் மாறி கரும்புள்ளிகளாகி முக அழகையே கெடுத்து விடும்.

ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து அடிக்கடி தடவி வர இவ்வாறு ஏற்படுவதை தடுக்கலாம்.

அரை கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கி, ஆற வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது மூக்கில் தடவி ஒரு சிறிய காட்டன் துணியை அதன் மீது ஒட்டி விடவும்.

பிறகு ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால்  கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும், இந்த முறையை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம்.

ஆகவே  மூக்கின் வெள்ளை அரும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இந்த எளிய வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்